Tamil Quotes

N.S.Krishnan History in Tamil – என். எஸ். கிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் என அழைக்கப்படும் நாகர்கோயில் சுடலைமுத்துப்பிள்ளை கிருஷ்ணன் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார். இவர் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர்.

இந்தியாவிலேயே புகழ்ப்பெற்ற நகைச்சுவை நடிகராக விளங்கிய இவர். உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் போல சிந்தனை கொண்டவர்.

மக்களிடையே நகைச்சுவை விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும், சினிமா ரசிகர்களின் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் சுடலைமுத்துப்பிள்ளை, இசக்கி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.

ஹேமமாலினி வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை :

இவர் தந்தை அப்போதைய ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நடத்தி வந்த தபால் அலுவலகத்தில் தபால்களை கொண்டு செல்லும் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவர் தாயார் இசக்கி அம்மாள் கணவரின் வருமானம் குறைவென்பதால் அவர் குடும்ப வறுமையை சமாளிக்க தனது வீட்டிலே சிற்றுண்டி செய்து விற்று வந்தார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், இவர் படிக்கவில்லை . நான்காம் வகுப்புடன் தன்னுடைய பள்ளிப்படிப்பைப் நிறுத்துக்கொண்ட அவர், சினிமா ஆசையால் நாடகக்குழுவில் சேர்ந்து சிறிதுகாலம் நடித்து வந்தார். பின் பல நாடகங்களை அவரே கதை எழுதி நடித்தும் வந்தார்.

சினிமா பயணம் :

அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும்.

பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ
150 படங்களில் நடித்தார்.

மேலும், இவருடைய மனைவி மதுரம் அவர்கள், ஒரு பிரபலமான நடிகை என்பதால், இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர்.

சிரிக்க வைத்த மாபெரும் சிந்தனையாளர் கலைவாணர் :

ஒரு நகைச்சுவை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு, கலைவாணரின் வசனங்களும் காட்சிகளும் இன்றைக்கும் என்றைக்குமான உதாரணங்கள். கணவன் மனைவிக்குள் இருக்கிற உறவைச் சொல்லி நக்கலடிப்பார்.

முதலாளிக்கும் தொழிலாளிக்குமான உறவை வைத்துக் கொண்டு கேலி பண்ணுவார். நண்பர்களுக்கு இடையே, அரசாங்கத்துக்கு இடையே,
மக்களுக்கு நடுவே என இவர் செய்யாத கேலியே கிடையாது.

சில திரைப்படங்கள் மற்றும் சில பாடல்கள் :

சில திரைப்படங்கள் :

சதிலீலாவதி, பைத்தியக்காரன், நல்ல தம்பி, அமரகவி, பணம், டாக்டர் சாவித்திரி, நம் குழந்தை, முதல் தேதி, காவேரி ,மதுரை வீரன் நன்னம்பிக்கை.

சில பாடல்கள் :

ஜெயிலுக்குப் போய் வந்த, பணக்காரர் தேடுகின்ற, ஆசையாக பேசிப்பேசி, நித்தமும் ஆனந்தமே, விஜய காண்டிபா வீரா, அன்னம் வாங்கலையோ, இவனாலே ஓயாதத் தொல்லை.

கொலைக் குற்றச்சாட்டு :

அப்போது புகழ்பெற்ற கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் இலட்சுமி காந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலைப் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தியா விடுதலை பெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன் தான் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார்.

ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்குப் பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது.

இல்லற வாழ்க்கை :

1931 ஆம் ஆண்டு நாகம்மை என்னும் பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார். பின் அவருக்கு டி. எம். மதுரம் என்ற நடிகையுடன் காதல் வந்தது, விரைவில் திருமணமும் செய்துக்கொண்டனர்.

பின்னர், டி. எம். மதுரத்தின் தங்கை வேம்பு என்பவரை மூன்றாம் மனைவியாக திருமணமும் செய்துக்கொண்டனர். .

மறைவு :

1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி என். எஸ் கிருஷ்ணன் அவர்கள் மறந்தார். பின் தமிழாக அரசு சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு, ‘கலைவாணர் அரங்கம்’ எனப் பெயர் சூட்டியது.

சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதிகளைத் தூவிய மாபெரும் சிந்தனையாளர். காலங்கள் மாறினாலும், திரைப்படத்துறையில் மாற்றங்கள் பல நிகழ்ந்தாலும், என். எஸ். கலைவாணர் அவர்கள் நூற்றாண்டுகள் பல கடந்தும், கலையுலகில் சாகா சரித்திர நாயகனாக வாழ்ந்துவருகிறார் என்பதில், எந்தவித ஐயமும் இல்லை.

தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்குப் பணத்தை வாரி வழங்கிய அற்புத மனிதர் ஆவார்.

Exit mobile version