20 வருடத்திற்கும் மேல் “கனவுக் கன்னியாக” இந்தித் திரையுலகில் இருந்த ஹேமமாலினி. தமிழ்நாட்டில் பிறந்து இந்தித் திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டியாவர்.
1963 இல் நடனப் பெண்மணியாக இது சத்தியம் என்ற திரைப்படத்திலும் 1965இல் நடனப் பெண்மணியாக பாண்டவர் வனவாசம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். ஹேமமாலினியின் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து
கொள்ள தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு :
தியோல் ஹேமமாலினி தர்மேந்திரா அவர்கள் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் அம்மன்குடி என்னுமிடத்தில் தமிழ்-பேசும் ஐயங்கார் குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாகப் அக்டோபர் 16, 1948 ஆம் ஆண்டு சக்கரவர்த்திக்கும், ஜெயாவிற்கும் மகளாக பிறந்தார்.
இவர் தாய் சமூக சேவகராகவும் , தந்தை இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில்
அதிகாரியாகவும் பணிபுரிந்து வந்தனர்.
ஆரம்ப வாழ்க்கை :
சென்னையின் ஆந்திர மகிள சபாவில் வரலாற்றுப் பிரிவில் கல்வி கற்றார். தந்தை தில்லியில் வேலைப்பார்த்து வந்ததால், பின்னர் டெல்லியில் இருக்கும் மந்திர் மார்கிலுள்ள பள்ளியில் முடித்தார்.
அவர் பள்ளிப்படிப்போடு, பரதநாட்டியமும் கற்றுக்கொண்டார். பின்னர், அவருடைய தந்தைக்கு சென்னைக்கு பணிமாற்றம் கிடைத்ததால், ஹேமமாலினி தன்னுடைய நடனக் கலையை சென்னையில் தொடர்ந்தார்.
திரைப்பட வாழ்க்கை :
1963 இல் நடனப் பெண்மணியாக இது சத்தியம் என்ற திரைப்படத்திலும் 1965இல் நடனப் பெண்மணியாக பாண்டவர் வனவாசம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இவர் கதைநாயகியாக நடித்த முதல் திரைப்படம் 1968ஆம் ஆண்டு வெளிவந்த சப்னோ கா சௌதாகர் ஆகும்; இதனைத் தொடர்ந்து பல பாலிவுட் திரைப்படங்களில், முன்னணி நாயகியாக நடித்துள்ளார்.
பெரும்பாலான திரைப்படங்களில் தனது கணவரும் திரைப்பட நடிகருமான தர்மேந்திராவுடன் நடித்துள்ளார்; ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாகவும் நடித்துள்ளார்.
துவக்க காலத்தில் “கனவுக் கன்னி” என அறிமுகப்படுத்தப்பட்ட ஹேம மாலினி, 1977இல் அதே பெயருள்ள (டிரீம் கேர்ள்) திரைப்படத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள ஹேம மாலினி சிறந்த நடனக் கலைஞரும் ஆவார். 150 திரைப்படங்களுக்கும் கூடுதலாக நடித்துள்ளார்.
தனது திரைப்பட வாழ்க்கையில், ஹேம மாலினிக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பதினோரு முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்; 1972இல் ஒருமுறை வென்றுள்ளார்.
2000இல் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதினையும் இந்திய அரசின் பத்மசிறீ விருதையும் பெற்றுள்ளார். 2012இல் சேர் பதம்பத் சிங்கானியா பல்கலைக்கழகம் ஹேம மாலினிக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.
இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் அவைத்தலைவராக பணியாற்றியுள்ளார். 2006இல் சோபோரி இசை மற்றும் நிகழ்த்து கலை அகாதமியிலிருந்து விடாஸ்டா விருது பெற்றுள்ளார்.
ஹேமமாலினி நடித்த திரைப்படங்கள் சில :
ஹேமமாலினி இதுவரை 100க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். சுமார் 25 ஆண்டுகாலம் இந்தித் திரைப்பட உலகில் பெரும் சிகரத்தில் இருந்தார்.
ஹேமமாலினி நடித்த திரைப்படங்களில் சில பாண்டவ வனவாசம், சப்னோ கா சௌதாகர், வாரிஸ், அலிபாபா ஔர் 40 சோர், கிரான்த்தி, மேரி அவாஸ் சுனோ, சத்தே பெ சத்தா, தேஷ் ப்ரேமி, ரசியா சுல்தான், அந்தா கானூன், ஹம் தோனோ, சிதாபூர் கி கீதா, ஜமை ராஜா, ஹே ராம், சென்சார், அமன் கெ பரிஷ்தே, பாக்பான், வீர்-சாரா, பாக்மதி, கங்கா மற்றும் லாகா சுனரி மே டாக்.
அரசியல் பணிவாழ்வு :
1999இல் ஹேம மாலினி பஞ்சாபின் குர்தாசுபூர் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் இந்திப்பட நடிகர் வினோத் கண்ணாவிற்காக பரப்புரையில் ஈடுபட்டார். 2004ஆம் ஆண்டு பெப்ரவரியில் அலுவல்முறையாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
2003 முதல் 2009 வரை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு குடியரசுத்
தலைவர் அப்துல் கலாமால் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மார்ச்சு 2010இல் பாஜகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2014இல் மக்களவை பொதுத் தேர்தலில் மதுராவிலிருந்து 3,30,743 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றார்.
திருமண வாழ்க்கை :
ஹேமமாலினியை திருமணம் செய்து கொள்ள பல நடிகர்கள் போட்டிப்போட்டனர். அவர்களில் தர்மேந்திரா, சஞ்சீவ்குமார் மற்றும் ஜித்தேந்திரா ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவார்.
இறுதியில் தர்மேந்திராவை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றாலும் அவருடைய காதலை ஏற்றுக்கொண்டார். இவர்களுக்கு இஷா மற்றும் ஆஷா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
விருதுகள் :
1999 ஆம் ஆண்டு சீதா ஔர் கீதா என்ற திரைபடத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய விருதான பத்மஸ்ரீ விருது, 2000 ஆம் ஆண்டு மத்திய அரசால் வழங்கப்பட்டது.
வாழ்நாள் சாதனையாளருக்கான ஜீ சினி விருது 2003 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
ஸ்டார் ஸ்கிரீன் விருது பாக்பன் ஜோடி நம்பர் ஒண்ணுக்காக வழங்கப்பட்டது.
2003 ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்பட சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்திய சினிமாவில் ஹேமமாலினியின் சிறப்பான பங்களிப்பை பாராட்டும் விதத்தில் நார்வே அரசு, ஹேமமாலினியின் அஞ்சல் தலையை வெளியிட்டது.