Tamil Quotes

Tamil Comedy Actress Kovai Sarala  History in Tamil – கோவை சரளா வாழ்க்கை வரலாறு

நகைச்சுவைத் திறமை என்பது எல்லோருக்கும் அமையாது. அதுவும், பெண்களுக்கு அமைவது சாதாரண விஷயமில்லை என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் திரையுலகில் பெண் நகைச்சுவையாளர்கள் மிகவும் குறைவாக இருப்பது அனைவருக்கும் தெரியும்.

‘ஆச்சி’ மனோரமாவிற்கு அடுத்து, தமிழ் திரையுலகில் நடிகை கோவை சரளா என்று நாம் சொல்லலாம். இதுவரை1000 படங்களில் நகைச்சுவைத் திறமையை நடித்துள்ளார்.

அந்த அளவுக்கு திறமையாக இருக்கக்கூடிய நடிகை கோவை சரளா அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

கோவை சரளா தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூரில் 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர்.

கோவை சரளா இயற்பெயர் சரளா. பின் இவர் பிறந்த கொங்கு நாடான கோவை என்ற பெயரை அவரது பெயரின் முன்னாள் சேர்த்துக் கொண்டார்.

இளமைப் பருவம் :

கோவை சரளா அவரது கல்வியை கோவையில் தொடங்கினார். சிறு வயதிலிருந்தே நல்ல பேச்சுத் திறமை உள்ளவர் இவர். ஒருமுறை எம்.ஜி.ஆர். கோவைவந்த போது, கோவை சரளாவை ஒருவர் அறிமுகம் செய்து வைத்தார்.

அவருடைய திறமைகளைப் அறிந்த எம்.ஜி.ஆர், அவரிடம் ‘உனக்கு நிறைய திறமை இருக்கு. என்று சொல்லி, கைநிறைய உதவித் தொகை அள்ளி வழங்கினார். அந்த உதவித் தொகையில் படித்த அவர், எம்.ஜி.ஆரை போல நாமும் பிறருக்கு படிக்க உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டார்.

அதனால அவர் பள்ளிப்படிப்பை முடித்ததும் சினிமாவில் நுழைய ஆசைபட்டா கோவை சரளா ,அவர் தந்தையும், அக்காவும் அதற்க்கு சரி சொன்னதால் அவர் திரையுலகில் நுழைந்தார்.

நடிகர் சூர்யா வாழ்க்கை வரலாறு

திரையுலக வாழ்க்கை :

வாய்ப்பு தேடி திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் சென்னைக்கு வந்த கோவை சரளா. பாக்யராஜை சந்தித்துத் தனது திறமைகளை வெளிப்படுத்தினார். அவரது பேச்சால் ஈர்க்கப்பட்ட பாக்யராஜ் திரைக்கதை எழுதி,1983ல் நடித்த படமான ‘முந்தானை முடிச்சு’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் கோவை சரளாவை அறிமுகம் செய்தார்.

அதன் பிறகு பல படங்களில் நடித்தார் கோவை சரளா. 2018 ஆம் ஆண்டில் இருந்து சில காரணத்தால் படங்களில் இருந்து ஒதுங்கி இருந்த கோவை சரளா.

மூன்றாண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், மீண்டும்’ காஞ்சனா’ (2011) திரைப்படம் மூலம் தனது இரண்டாம் இன்னிங்க்சை தொடங்கிய அவர், ‘வானவராயன் வல்லவராயன்’ (2013), ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா?’ (2012), ‘தில்லு முல்லு’ (2013) போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ்ப் படங்களைத் தவிர, தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை :

கோவை சரளாவுக்கு திருமணம் ஆகவில்லை. கோவை சரளா சகோதரி, சகோதரர் பிள்ளைகளைத் அவர் பிள்ளைகள் போல் நினைத்து வளர்கிறார்.

அது மட்டும் இல்லாமல் பல ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கும், வயதானவர்களின் நலனுக்காகவும் அவரால் முடிந்த உதவிகளைசெய்து வருகிறார்.

தொலைக்காட்சி வாழ்க்கை :

1983 ஆம் ஆண்டு திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய கோவை சரளா , 2008 ஆம் ஆண்டு திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால். அவர், கலைஞர் டிவியில் ‘வந்தனா தந்தனா’, சன் டிவியில் ‘சுந்தரி சௌந்தரி’ மற்றும் ஜெயா டிவியில் ‘சபாஷ் மீரா’ போன்ற நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார்.

பின்னர், சன் டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சியான ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியில் ஒரு நடுவராக இருந்தார்.அதன் பின் கலைஞர் டிவியில் ‘பாசப் பறவைகள்’ என்ற குடும்ப விளையாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து
வழங்குகிறார்.

பிரபலமான அவரின் சில டையலாக்குகள் :

கரகாட்டக்காரன் – ‘என்னை காரைக்குடி பார்ட்டியில கூப்பிட்டாகோ, தஞ்சாவூர் பார்ட்டியில கூப்பிட்டாகோ, அங்கெல்லாம் போகாம என் கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்’

ஷாஜஹான் – ‘தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’

அரசியல் :

மார்ச் 8 2019 ஆம் ஆண்டு மக்கள் நீதி மையத்தின் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நடிகை கோவை சரளா கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மையத்தில் இன்று இணைந்தார்.மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பிறகு பேசிய கோவை சரளா, எங்குச் செல்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தேன்.

இது நல்ல இடமாக இருந்தது. எனவே இங்கு வந்துள்ளேன். இங்கு இருப்பதைப் பார்த்தால் ‘மக்கள் நீதி மய்யம்’ மகளிர் நீதி மய்யமாக மாறிவிடும் போல உள்ளது. மக்கள் நீதி மய்யம் மகளிருக்கான நீதியைப் பெற்றுத் தரும் என நம்புகிறேன். எனவே இந்தக் கட்சியில் இணைகிறேன். என்னை மக்கள் திரையில் வாழவைத்தார்கள். அவர்களுக்கு இங்கிருந்து ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறேன் என்று கூறினார்.

விருதுகள் :

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை ‘பூவெல்லாம் உன் வாசம்’ மற்றும் ‘ஒரி நீ பிரேம பங்கரம் கனு’ என்ற படங்களில் வென்றுள்ளார்.

மனோரமாவிற்கு அடுத்தபடியாக ஒரு தலைச்சிறந்த நகைச்சுவையாளராக இருக்கும் கோவை சரளா. தென்னிந்தியத் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் . 25 ஆண்டுகளாகத் திரையுலகில் இருந்து வரும் கோவை சரளாவுக்கு ஈடு குடுக்க அந்த ஒரு நகைச்சுவை, நடிகையாளும் முடியாது.




Exit mobile version