Tamil Quotes

Shah Rukh Khan History in Tamil – ஷாருக்கான் வாழ்க்கை வரலாறு

எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தொலைக்காட்சி மூலமாக வாய்ப்பு கேட்டு படிப்படியாகத் திறமைகளை வளர்த்துக் கொண்டு வில்லனாக பாலிவுட்டில் நுழைந்து இன்று ஹீரோவாக இருப்பது மட்டும் இல்லாமல். அனைவராலும் பாலிவுட்டின் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கான்.

உலகளவில் ரசிகர்களைத் கோடி கணக்கில் வைத்துள்ளார் ஷாருக்கான். சாதரணமாக வாழ்கையை தொடங்கிய அவர் இன்று உலகின் அனைத்து திரையுலகையுமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு முன்னேறிய ஷாருக்கான் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

ஷாருக்கான் அவர்கள் புது தில்லியில் 1965 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் தேதி தாஜ் முகமது கான் மற்றும் லதீஃப் பாத்திமாவிற்கு மகனாகப் பிறந்தார்.

திருபாய் அம்பானி வாழ்கை வரலாறு

ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும் :

ஷாருக்கான் டெல்லியில் உள்ள செயின்ட் கொலம்பியா பள்ளியில் பள்ளிப்படிப்பைக் தொடங்கினார். பள்ளியில் படிக்கும் போது விளையாட்டு, நடிப்பு போன்ற அனைத்திலும் சிறந்து விளங்கிய அவர் பல பட்டங்களை பள்ளி பயிலும் போது பெற்று இருக்கிறார்.

ஷாருக்கானின் 15 வயதிருக்கும் போது, அவரது தந்தை புற்றுநோயால் இறந்தார். பின் கஷ்டப்பட்டு பள்ளி படிப்பைமுடித்ததற்கு பிறகு 1985ல் கல்லூரியில் சேர்ந்து 1988 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் தனது இளநிலைப் பட்டத்தை பெற்றார். அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் முதுநிலைப் பட்டமும் பொருளாதாரத்தில் பெற்றார்.

ஆனால் அவரது ஆசை பாலிவுட்டில் நுழைவது இதன் காரணமாக, அவர் தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்தார். அவரது தாயார் வெகு நாட்காளாக நோய்வாய்ப்பட்டிருந்ததால் 1990ல் மரணமடைந்தார்.

அவரது தாயார் சொன்னது போல கடும் முயற்சியால் மட்டுமே
வெற்றியின் இலக்கை அடைந்தார்.

இல்லற வாழ்க்கை :

ஒரு இந்து பெண்ணை காதலித்து பல எதிர்ப்புகளை மீறி, 1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி திருமணம் செய்தனர்.அவர்கள் இருவருக்கும் ஆரியன் என்ற மகனும், சுஹானா என்ற மகளும் பிறந்தனர்.

திரையுலகப் வாழ்கை :

தாயார் இறப்பிற்கு முன்பே தில் டரியா மற்றும் ஃபௌஜி என்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். ஃபௌஜி என்ற தொடரில் அவர் நடித்த கமாண்டோ கதாபாத்திரம் மிகவும் பிரபலம் ஆனாது .

இதன் விளைவாக ஹேமாமாலினி இயக்கும் படமான ‘தில் ஆஷ்னா ஹை என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்பட வாய்ப்பைப் பெற்ற அவர், மும்பைக்குப் பயணமானார்.

முதலில் நடித்தப் படமான ‘தில் ஆஷ்னா ஹை’ வெளிவருவதில் தாமதமானதால், அவரது ‘தீவானா’ என்ற படம் 1992ல் முதலில் வெளியானது. அதைத் தொடர்ந்து, அவர் சமத்கார் (1992), இடியட் (1992) என பல படங்கள் நடித்து படிப்படியாக பாலிவுட்டின் பாட்ஷா ஆனார்.

உலகநாயகன் கமல் மற்றும் ஷாருக்கான் இருவரும் இணைந்து ஹே ராம் திரைப்படம் நடித்து உள்ளார்கள்.

தயாரிப்பு நிறுவனராக ஷாருக் :

வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் போது 1999ல் ட்ரீம்ஸ் அன்லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய அவர். ஐந்து ஆண்டுகள் கழித்து அதை ரெட் சில்லீஸ் என்டெர்டைன்மென்ட் என்ற பெயரில் மாற்றி தனது மனைவியைத் தயாரிப்பாளராக அறிவித்தார்.

அந்நிறுவனம் ரா ஒன்,டான் 2 என பல திரைப்படங்களைத் தயாரித்தது.

தொலைக்காட்சித் தொகுப்பாளராக :

2007 ஆம் ஆண்டு கோன் பனேகா கரோர்பதி, 2008 ஆம் ஆண்டு க்யா ஆப் பான்ச்வி பாஸ் சே தேஜ் ஹை, 2011 ஆம் ஆண்டு ஜோர் கா ஜட்கா போன்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

விருதுகள் :

1997 ஆம் ஆண்டு சிறந்த இந்திய குடியுரிமை விருது பெற்றார்.

2002 ஆம் ஆண்டு பொழுதுபோக்கு துறையில் சிறந்து விளங்கியதால் ராஜீவ் காந்தி விருது பெற்றார்.

2005 ஆம் ஆண்டு இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான ‘பத்ம ஸ்ரீ’ விருதை பெற்றார்.

15 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளை பெற்றார்.

6 முறை ஐஐஎஃப்ஏ சிறந்த நடிகருக்கான விருதுகள்.

8 ஜீ சினி விருதுகள்.

13 ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகள்.

3 பாலிவுட் திரைப்பட விருதுகள்.

2 குளோபல் இந்திய திரைப்பட விருதுகள்.

6 முறை சான்சூய் விருதுகள்.

Exit mobile version