Tamil Quotes

Mammootty History in Tamil – மம்முட்டி வாழ்க்கை வரலாறு

நான்கு முறை தேசிய விருது பெற்ற நடிகர், மலையாளம், தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

கேரள அரசின் விருதை மூன்று முறைக்கு மேல் வாங்கியுள்ளார் பத்ம ஸ்ரீ” விருது மற்றும் பல விருதுகளையும் பெற்று இன்று இந்திய திரையுலகில் மாபெரும் நடிகனாக விளங்குகிறார். மம்முட்டி அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் அருகில் ஒரு நடுத்தர முஸ்லீம் குடும்பத்தில் 7 செப்டம்பர் 1949 அன்று பிறந்தார், இவரது தந்தை இஸ்மாயில் ஒரு விவசாயி மற்றும் தாய் பாத்திமா இல்லத்தரசி ஆவர். இவருடைய இயற்பெயர் முகமது குட்டி.

லதா மங்கேஷ்கர் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

1960 ஆம் ஆண்டு இவர் குடும்பம் எர்ணாகுளம் சென்றது. அவர் உயர்நிலைப் பள்ளிக்கல்வியை பட்டப்படிப்புக்கு முந்தையது கொச்சியிலுள்ள மகாராஜாஸ் கல்லூரியில் முடித்தார், அதன் பிறகு எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார். பின் 2 ஆண்டுகள் சட்டப் பயிற்சியும் எடுத்தார்.

திரைப்பட வாழ்க்கை :

தன்னுடைய கல்லூரிப் பருவத்திலேயே நடிக்கத் தொடங்கிய மம்முட்டி சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் இவர் நடித்த அணைத்து பாத்திரமும் வெற்றியை பெற்றது.

பிறகு பல ஆண்டுகள் கழித்து தேவலோகம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகவில்லை. பின் 1980 ஆம் ஆண்டு வாசுதேவன் நாயர் இயக்கத்தில் வீல்கணுண்டு படத்தில் நடித்து வெற்றி பெற்றார்.

பின் மேலா,திருஸ்னா போன்ற திரைப்படங்கள் அவருக்கு மலையாளத் திரைப்பட உலகில் ஒரு கதாநாயன் அந்தஸ்த்தை பெற்றுத்தந்தது. பின் வருசையாக படம் நடித்தார். இது இவருக்கு திரைப்படப் துறையில் பெரும்
புகழும் பெற்றுத்தந்தது.

1982 முதல் 1986 வரையிலான ஐந்து ஆண்டுகள் காலகட்டத்தில் மம்மூட்டி கதாநாயகனாக 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார்.எம். டி. எழுதி ஐ.வி. சசி
இயக்கிய ஆதியொழுக்குகள் திரைப்படத்தில் கருணன் பாத்திரத்தில் அவர் நடித்தது, அவருக்கு சிறந்த நடிகர் பிரிவில் மாநில விருதையும் பிலிம்பேர் விருதையும் பெற்றுத் தந்தது.


மம்மூட்டி, பாலு மகேந்திரா இயக்கிய யாத்திரா திரைப்படத்தில் வன அதிகாரி வேடத்தில் நடித்ததற்காக மாநில சிறப்பு ஜூரி விருதையும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார்.

இல்லற வாழ்க்கை :

மம்மூட்டி மே 6 1979 ஆம் ஆண்டு சல்பத் குட்டி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு குட்டி சுருமி என்ற மகளும் மற்றும் துல்கர் சல்மான் என்ற மகனும் பிறந்தார்கள்.

தேசிய விருதுகள் :

வடக்கன் வீரக்கதா மற்றும் மதிலுகள் திரைப்படம் மம்முட்டியின் திரைப்பட வாழ்கையில் ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றத் தந்தது எனலாம். இந்த இரண்டு படத்தால் இந்திய திரைப்படத்துறையில் உயர்ந்த விருதான தேசிய விருதை பெற்றார்.

பிறகு பொந்தன் மாடா மற்றும் விதேயன் திரைப்படங்கள் இரண்டாவது தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. பின் மூன்றாவது தேசிய விருதை டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் திரைப்படத்திற்காக வென்றார்.

பிறமொழித் திரைப்படங்கள் :

மம்முட்டி அவர்கள், மலையாள திரைப்படத்தில் மட்டும் நடிக்காமல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என அணைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

மௌனம் சம்மதம் என்ற திரைப்படத்தில் முதன் முதலில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

சமூகப்பணிகள் :

மம்மூட்டி உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் அரை டஜனுக்கும் மேற்பட்ட ஏழைகள் மறுவாழ்வுத் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார். இவர் கேரளாவிலுள்ள பெயின் அண்ட் பல்லியேடிவ் கேர் சொசைட்டி அறக்கட்டளை அமைப்பின் உறுப்பினராக இருக்கிறார். இந்த அமைப்பு வலி மற்றும் நோய்ப் தணிப்பு கவனிப்பு மையமாக செயல்படுகிறது.

குழந்தைகள் நலனை பாதுகாக்கும் இந்திய தெருமுனை இயக்கத்தில் நல்லெண்ணத் தூதராக இருக்கிறார்.

இதுமட்டுமல்லாமல், பல சமூக அமைப்புகள் மூலமாக சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.

பிறப்பணிகள் :

2006 ஆம் ஆண்டு “சவுத் இந்தியன் பேங்கின்” உலகளாவிய வணிக தூதராக நியமிக்கப்பட்டார்.

விருதுகள் :

1994 – பொந்தன் மாடா” மற்றும் விதேயன் என்ற திரைப்படங்களுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.

1998 – இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

2000 – டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கார் திரைப்படம் மூன்றாவது தேசிய விருதையும் இவருக்கு பெற்றுத்தந்தது.

சிறந்த நடிகருக்கான 8 ஃபிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

12 கேரள மாநில திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு கேரளா பல்கலைகழகம் மற்றும் கோழிகோடு பல்கலைக்கழகங்கள் இவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தது.

மேலும் பல திரைப்படங்களுக்காக “திரைப்பட விமர்சன விருதுகள்”, “வனித்த விருதுகள்”, “ஏசியாநெட் திரைப்பட விருதுகள்” என பல விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

Exit mobile version