இந்தியாவின் ‘இசைக்குயில் ’என அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் , பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கிறார்.சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ள அவர்.
இந்தியாவின் “பாரத ரத்னா விருது”, “பத்ம பூஷன் விருது”, “பத்ம விபூஷன்” விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், தேசிய விருது என பல விருதுகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
தன்னுடைய நான்கு வயதிலேயெ படத்தொடங்கி, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி லதா மங்கேஷ்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு :
இவர் 1929-ம் ஆண்டு, செப்டம்பர் 28-ம் தேதி, மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பிறந்தார். தந்தை மராத்தி , தாய் குஜராத்தி.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :
லதா மங்கேஷ்கரின் தந்தை கிளாசிக்கல் பாடகர் இதனால் இவர் சிறு வயதிலேயே மிகவும் சுறுசுறுப்பாய் திகழ்ந் தார்.
இவர் தந்தை லதாவை , புகழ் பெற்ற அமான் அலி கான் சாகிப் மற்றும் அமநாத் கான் ஆகியோரின் கீழ் இசைப்பயிற்சி கற்கவைத்தார். ஒன்பது வயதிலேயே அவருடைய அரங்கேற்றம் நடந்தது.
இசைப் பயணம் :
லதாவின் சகோதரர் ஹ்ருதய நாத்தும் காசநோயில் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். லதா தம்முடைய பன்னிரண்டு வயதிலேயே குடும்ப பாரத்தை சுமக்க வேண்டியவரானார். பதினைந்து வயதுவரை அவர் வருமானத்துக்காக சிறு சிறு வேடங்கள் ஏற்று நடிக்கவும் செய்தார்.
1942 ஆம் ஆண்டு சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், குலாம் ஹைதர் என்பவர் “மஜ்பூர்” என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு அளித்தார்.
இதனை தொடர்ந்து பல படங்களில் பாடி இவர் பெரும் புகழ் பெற்றார். பின் அவர் கொடிக்கட்டி பறந்தார் அவர் வீட்டு வாசற்படியில் தவம் கிடப்பார்கள் அனைவரும்.
லதா கடுமையாக உழைத்துப் பாடினார். பெரிய வெற்றிகளைப் பெற்ற போதும் லதா அடக்க மும், அமைதியும் உடையவராகவே இருந்தார்.
கின்னஸ் சாதனை :
லதா குரல் வளம், தெளிவான உச்சரிப்பு இவற்றோடு இசையமைப்பாளர்களின் குறிப்புகளையும் சரியாகப் பின்பற்றி தொழிலில் ஈடுபாடு காட்டி முன்னேறியவர், சினிமாப் பாடல்கள் மட்டுமன்றி, பக்திப் பாடல்களையும் பொதுப்பாடல்களையும் கவனத்துடன் பாடி அவருடைய சாதனை கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
லதா ஆறு பல்கலைக் கழகங்களில் முனைவர் பட்டம் பெற்றார். அவருடைய பெயரால் மத்ய பிரதேச மாநில அரசு தேசிய விருதொன்றை (1984)யும் நிறுவி யுள்ளது. தனது வாழ்நாளிலேயே தன்னுடைய பெயரால் விருது வழங்கப்படும் பெருமை பெற்ற ஒரே இந்தியர் லதா மங்கேஷ்கர்.
தேசிய விருது :
1973 ஆம் ஆண்டு, ஆர்.டி பர்மன் இசையமைத்து வெளிவந்த பரிஜாய் என்ற திரைப்படதில் இவர் பாடிய பீதி நா பிட்டை என்ற பாடல் சிறந்த பின்னனி பாடகருக்கான முதல் தேசிய விருதை பெற்றுத்தந்தது.
தயாரிப்பு மற்றும் ஆல்பங்கள் :
ஒரு பின்னணி பாடகராக மட்டுமல்லாமல், இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கியுள்ளார். 1953 ஆம் ஆண்டு “வாடல்” என்ற மராத்தி மொழித் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார்.
1961 ல் பஜனை பாடல்கள் அடங்கிய “அல்லாஹ் தேரா நாம்” மற்றும் “பிரபு தேரா நாம்” என்ற இரண்டு ஆல்பத்தை வெளியிட்டார். 2012 ஆம் ஆண்டு அவருடைய சொந்த பெயரில் எல்.எம் ஒரு இசை ஆல்பத்தையும் வெளியிட்டார்.
அரசியல் :
1999 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட லதா மங்கேஷ்கர், 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்தனா விருது” மத்திய அரசால் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இறப்பு :
பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல்களை பாடியுள்ள லதா மங்கேஷ்கர் 92 வயதில் கொரோனா தொற்றால் பிப்ரவரி 6, 2022 ஆம் ஆண்டு உயிரிழந்தார். லதா மங்கேஷ்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக , பிப்ரவரி 6 மற்றும் 7 ஆகிய 2 நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இந்த 2 நாட்களுக்கு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
விருதுகள் :
1969 – பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
1972 – தேசிய விருது வழங்கப்பட்டது.
1974 – அதிக பாடல்களை பாடியதற்காக “கின்னஸ் புத்தகத்தில்” இடம் பிடித்தார்.
1975 – தேசிய விருது வழங்கப்பட்டது.
1989 – தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
1990 – தேசிய விருது வழங்கப்பட்டது.
1993 – பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது.
1999 – பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டு நூர்ஜஹான் விருது,மகாராஷ்டிரா ரத்னா விருது,பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது.
5 முறை ஃபிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.