Tamil Quotes

போகர் விளையாட்டின் நாயகன் டான் பில்செரியன் வாழ்க்கை பயணம் – Dan Bilzerian Success Story

டான் பில்செரியன் சூதாட்டக்காரர், பணக்காரர், தொழிலதிபர், பிலே பாய் என சொல்லி கொண்டே போகலாம். இவர் வாழ்க்கையை கண்டு பலர் பொறாமை படும் அளவுக்கு வாழ்ந்து வருகிறார். இவர் வாழ்க்கை பயணத்தை தெரிந்து கொள்ள படிக்கவும்

பிறப்பு :

டான் பில்செரியன் டிசம்பர் 7, 1980 ஆம் ஆண்டு புளோரிடாவின் தம்பாவி என்னும் இடத்தில் பால் பில்செரியன் மற்றும் டெர்ரி ஸ்டெஃபென் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். இவருக்கு ஆடம் பில்செரியன் என்ற ஒரு சகோதரனும் இருக்கிறார்.

அவரது தந்தை வால் ஸ்ட்ரீட்டில் கார்ப்பரேட் ரெய்டராக இருந்தார். இவர் ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்.

50 பைசாவில் தொடங்கி தொழில்முனைவோராக ஆன பாட்ரிசியா

ஆரம்ப காலம் :

டான் பில்செரியன் பள்ளியில் படிக்கும் போது M16 துப்பாக்கியை கொண்டு வந்து காட்டி இருக்கிறார். இதனால் அவர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு துப்பாக்கி மீது ஆர்வம் இருந்ததால் அமெரிக்கா ராணுவத்தில் சேர பயிற்சி பெற்றார்.

ஆனால் அங்கு நடந்த சில பிரச்சனையால் அவர் வெளியாகினார். பின் இவர் சகோதரர் போக்கர் விளையாட்டில் இவரை ஆட அழைத்து சென்றார். தன்னுடைய துப்பாக்கியை சூதில் வைத்து விளையாடி முதன் முதலில் 10000 அமெரிக்கா டாலரை வெற்றி பெற்றார்.

பின் பல கோடி விளையாடி வெற்றி பெற்றார். பின் படிப்பின் மீது வந்த ஆர்வத்தால் நான்கு ஆண்டுகள் புளோரிடா பல்கலைக்கழகத்தில் படித்தார். பின் வணிகம் மற்றும் குற்றவியல் படிப்பில் பட்டம் பெற்றார்.

போகர் மற்றும் நிறுவனம் :

டான் பில்செரியன் 2008 ஆம் ஆண்டு போகர் முக்கிய நிகழ்வின் உலகத் தொடரில் விளையாடி 180வது இடத்தைப் பிடித்தார். 2011 ஆம் ஆண்டு போக்கர் கேம்களின் சூதாட்ட வழக்கில் பில்செரியன் முக்கிய இடத்தில் இருந்தார்.

அதே ஆண்டில் பில்செரியன் அலெக்ஸ் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. நவம்பர் 2013 இல்,
பில்செரியன் ஒரு இரவில் போக்கர் விளையாடி $10.8 மில்லியன் வென்றதாக உறுதிப்படுத்தப்படாது.

மேலும் 2014 ஆம் ஆண்டில் அவர் ஆண்டு முழுவதும் $50 மில்லியனை வென்றதாகக் கூறினார். மேலும் அவர் ஒரு அமர்வில் அதிகம் இழந்தது $3.6 மில்லியன் ஆகும். பின் போகர் விளையாட்டை நிறுத்தி விட்டு. போகர் விளையாட்டில் வெற்றி பெற்ற பணத்தை வைத்து பில்செரியன் இக்னைட் இன்டர்நேஷனல் பிராண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தை தொடங்கினார்.

இது மின்னணு சிகரெட்டுகள், CBD எண்ணெய்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் ஓட்கா போன்ற பிற தயாரிப்புகளை விற்பனை செய்கிறது. இக்னைட் என்பது கனடாவின் டொராண்டோவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பொது நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தின் மூலம் இவர் பல கோடி சம்பாரித்தார். இது ஜனவரி 2019 இல் BILZF டிக்கரின் கீழ் வர்த்தகத்தைத் தொடங்கியது. இந்த நிறுவனம் 2019 இல் $50 மில்லியனுக்கும் மேலாக இழந்ததாகக் கூறப்படுகிறது.

வழக்கு :

2014 ஆம் ஆண்டில், லோன் சர்வைவர் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது பில்செரியன் வழக்கு தொடர்ந்தார். இவர் $1 மில்லியனை படத்தில் நடிக்க முதலீடு செய்தார். பின்னர் ஒரு நிமிடத்திற்கும் குறைவாக அவர் திரையில் வந்ததால். அவரது வழக்கு $1.2 மில்லியன்-அசல் முதலீடு மற்றும் 20 சதவீதத்தை கோரியது.

இந்த வழக்கு பின்னர் கைவிடப்பட்டது, மேலும் படத்தின் வணிக வெற்றியின் காரணமாக பில்செரியன் $1.5 மில்லியன் வருவாயை ஈட்டியதாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 2014 இல், ஒரு சண்டையின் போது மாடல் வனேசா காஸ்டானோவை முகத்தில் உதைத்ததற்காக இரவு விடுதியில் இருந்து பில்செரியன் தடை செய்யப்பட்டார். காஸ்டானோவும் மற்றொரு பெண்ணும் பில்செரியனின் பெண் துணையைத் தாக்கியதாக பில்செரியன் கூறினார்.

பின்னர் பில்செரியனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று
காஸ்டானோ நினைத்தார். வழக்கு விசாரணைக்கு சென்றால், அதிக தண்டனைக்குரிய சேதங்கள் ஏற்படும் வாய்ப்பைக் காரணம் காட்டி, காஸ்டானோ பில்செரியனிடம் $1 மில்லியன் இவர் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

டிசம்பர் 9, 2014 அன்று, பில்செரியன் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் தொடர்பில்லாத வெடிகுண்டு தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.


பின் ஜனவரி 2015 இல் நெவாடாவின் கிளார்க் கவுண்டியில் ஆஜர்படுத்த திட்டமிடப்பட்டது. இந்த குற்றச்சாட்டிற்கு $17,231.50 அபராதம் விதிக்கப்பட்டது.

சர்ச்சை :

சூதாட்ட வாழ்க்கையின் வெற்றிகரமான விளைவுதான் எனது செல்வம் என்று பில்செரியன் கூறுகிறார். இருப்பினும், இந்த கூற்று பல்வேறு நபர்களால் மறுக்கப்பட்டது. அவரது தந்தை 1989 இல் பல்வேறு பத்திரச் சட்ட மீறல்களுக்காக தண்டிக்கப்பட்டார், மேலும் 1993 இல் அவர் $30 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத லாபத்தை SEC க்கு செலுத்த நீதிமன்றம் உத்தரவுயிட்டது .

பால் பணத்தை செலுத்தவில்லை. பால் இரண்டு குழந்தைகளான டான் மற்றும் ஆடம் ஆகியோருக்கு ஒரு அறக்கட்டளை நிதியை நிறுவினார். டானின் நிதிகள் 2010 ஆம் ஆண்டில் இவர்களுக்கு தரப்பட்டது அதனால் தான் இவர் ஆடம்பரமாக இருக்கிறார் என்று சொல்கிறார்கள். போதைப்பொருள் பழக்கத்தால் பில்செரியனுக்கு 32 வயதில் இரண்டு மாரடைப்புகளை சந்தித்ததாக கூறப்படுகிறது.

ஆடம்பர வாழ்க்கை :

இவர் கஞ்சா, பெண், துப்பாக்கி போன்றவற்றை விரும்புவார். அதனால் அதை எப்பொழுதும் இவை மூன்றையும் பக்கத்திலேயே வைத்து இருப்பார். இவர் காலை மாலை என அணைத்து நேரமும் கங்கா புகைப்பார்.

குறைந்த பட்சம் 10 பெண்கள் இவர் பக்கத்தில் இருப்பார்கள். வரம் ஒரு முறை பெண்களை மாற்றுவார். 2000 கோடி மதிப்புள்ள வீட்டை கட்டியுள்ளார். விமானம், பெண்கள், போதை என வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

Exit mobile version