ஆந்திர மாநிலத்தில் விஜயலட்சுமியாகப் பிறந்த சில்க் ஸ்மிதா பெண்ணே பொறாமைப்படும் பேரழகு. தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களில் 450க்கும் மேல் திரைப்படங்களில் நடித்து உள்ளார்.
கிறங்க வைக்கும் கண்களும், சொக்கி இழுக்கும் வனப்பும், திராவிட நிறமும் சில்க் ஸ்மிதாவை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றன. சுமார் 17 வருடங்கள் இந்திய சினிமாத் துறையில் முத்திரைப் பதித்த அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு :
சில்க் ஸ்மிதா இயற்பெயர் விஜயலட்சுமி. 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 02 தேதி ஆந்திரபிரதேசம் மாநிலத்திலுள்ள ஏலூரு என்ற இடத்தில் பிறந்தார்.
நடிகர் பிரபுதேவா வாழ்க்கை வரலாறு
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :
தன்னுடைய பள்ளிப்படிப்பை வறுமையின் காரணமாக நான்காம் வகுப்போடு நிறுத்திக் கொண்டார். இளமையில் இவருடைய அழகினால் பலருடைய தொல்லைக்கு ஆளானார்.
இதனால், சிறுவயதிலேயே பெற்றோர்கள் இவருக்கு திருமணம் செய்து வைத்து உள்ளனர். பிறகு குடும்ப வாழ்க்கையின் பிரச்சனை காரணமாக சென்னைக்கு வந்து சேர்ந்த அவர், அங்கு உறவினர் வீட்டில் தங்கி திரை வாய்ப்பை தேடினார்.
திரைப்பட வாழ்க்கை :
வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த காலகட்டத்தில் நடிகை சில்க் ஸ்மிதாவை ஏவிஎம் ஸ்டுடியோவிற்கு எதிரில் சந்தித்த இயக்குநர் வினுசக்கரவர்த்தி ’வண்டிச்சக்கரம்’ என்ற திரைப்படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் சாராய வியாபாரியாக நடிக்க விஜயலட்சுமிக்கு வாய்ப்பு வழங்கினார்.
முதல் படத்தில் அவருக்கு புகழ் சேர்த்த சில்க் என்ற பெயரையும் உடன் சேர்த்துக்கொண்டார். முதல் படத்திற்கு பின்னரே நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு தமிழில் வாய்ப்புகள் குவிய தொடங்கின. பிறகு 1979 ஆம் ஆண்டு இணையே தேடி என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்பட உலகில் அறிமுகமானார்.
தன்னுடைய முதல் கதாபாத்திரத்தில் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவாக இறுதிவரை அவருக்கு ஒரே மாதிரியான காதாபாத்திரங்கள் மட்டுமே தேடிவந்தது. இதன் காரணமாக குறுகிய காலகட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார் சில்க் ஸ்மிதா.
இவர் நடிப்பில் பல கதாபத்திரத்தினை ஏற்று நடித்திருந்தாலும், கவர்ச்சியான கதாபத்திரத்தை மட்டும் தான் ரசிகர்கள் விரும்பினார்கள்.
சில்க் ஸ்மிதா சர்ச்சைகள் :
கவர்ச்சி நடிகையாக இருந்ததால் பலரின் பாலியல் சீண்டல்களுக்கும் ஆளான சில்க் ஸ்மிதா, ஆண்களால் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை பலமுறை பொதுவெளியில் பேசியுள்ளார். அன்றைய தேதியில் முதல்வராக இருந்த எம்ஜிஆர் பங்கேற்ற விழாவில் பங்கேற்க மறுத்தது.
நடிகர் சிவாஜி கணேசன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது எழுந்து நிற்க மறுத்தது உள்ளிட்டவை சில்க் ஸ்மிதாவை திமிர் பிடித்த பெண்ணாக காட்டியது. சிறுவயதில் பல நெருக்கடிகளுக்கும் ஆளான காரணத்தால் தன்னையொரு நக்சலாக நினைப்பதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார் சில்க் ஸ்மிதா.
இறப்பு :
1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 35 வது வயதில் சென்னையில் அவருடைய வீட்டிலேயே தூக்குப் போட்டு இறந்தார்.
மர்மங்களால் நிறைந்த சில்க் ஸ்மிதாவின் இறுதி வாழ்க்கையில் தாடிக்கார டாக்டர் என்ற பெயர் இன்றளவும் யாரென கண்டுபிடிக்கப்படாமல் மர்மமாகவே இருந்து வருகிறது.
இந்த தாடிக்கார நபர் தான் சில்க் ஸ்மிதாவை வைத்து இருந்தார் என சொல்லப்படுகிறது.புகழின் உச்சியில் இருந்தபோதும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல மர்மங்களை ஒளித்து வைத்திருந்த சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறை
தி டர்டி பிக்சர் என்ற பெயரில் வெளியானது.