Tamil Quotes

அத்தனை வித பழங்கள் இருந்தும் தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன் தெரியுமா இது தெரியாமல் இருக்காதீங்க!

தெய்வங்களுக்கு தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டு விட்டு கொட்டையை வீசி எறிந்தால் மீண்டும் முளைக்கும்.

ஆனால் வாழைப் பழத்தை உரித்தோ முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.

எனது இறைவா மீண்டும் பிறவாத நிலையைக் கொடு என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.

அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.

மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும்.

பண பெட்டியை எந்த திசையில் வைத்தால் பணம் சேரும் தெரியுமா? அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் வாழ்க்கையில் பணமே சேராது

அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழத்தில் கொட்டை என்பது கிடையாது.

அப்படி நமது எச்சில் படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம். இதுவே இந்து தர்மத்தின் தனிச்சிறப்பு

பிடிச்சா லைக் பண்ணுங்கள் ரொம்ப பிடிச்சா ஃபாலோ பண்ணுங்க சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்

Exit mobile version