நகரின் மறுமுனையில் இருந்து சில புத்தகங்கள் தேவைப்படும்போது, அடிக்கடி தாமதமாகவும் களைப்பாகவும் வீட்டிற்கு வரும் தந்தையிடம் தேவைக்கு கேட்க முடியாதபோது, லாஜிஸ்டிக்ஸ் ஸ்டார்ட் அப் பற்றிய இந்த எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.
புத்தகத்தை விட கூரியர் கட்டணம் மிக அதிகமாக இருப்பதைக் கண்டறிந்த பிறகு, அவர் இந்த யோசனையை நோக்கிச் சென்றார். திலக் மேத்தா இந்தியாவின் இளைய தொழில்முனைவர் , TEDx பேச்சாளர் மற்றும் இளைய ஃபோர்ப்ஸ் பேனலிஸ்ட் ஆவார்.
அவர் தனது 13 வயதில் முதல் வணிகத்தைத் தொடங்கினார், வெறும் 15
வயதில், அவர் கோடி ரூபாய் வருமானம் அடைந்துள்ளார். மேலும் அவர் தனது யோசனைக்கு சமூகத்திற்கு உதவும் ஒரு ஆன்லைன் தளத்தைத் தொடங்கியுள்ளார்.
அவர் எப்போதும் புதிய வாய்ப்புகளைத் தேடுகிறார் மற்றும் ஆபத்துக்களை எடுக்கத் தயாராக இருக்கிறார். அவரது மிக முக்கியமான ஆபத்து அவரது சொந்த தொழிலைத் தொடங்குவதுதான்.
ஆனால் அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இன்று நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு திலகர் ஒரு உத்வேகமாக இருக்கிறார். கடினமாக உழைக்கவும், ரிஸ்க் எடுக்கவும் தயாராக இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதை
நிரூபிக்கிறார் இவரை பற்றி அறிந்து கொள்ள மேலும் படிக்கவும்.
பிறப்பு :
2006 ஆம் ஆண்டு திலக் மேத்தா குஜராத்தில் தந்தை விஷால் மேத்தா மற்றும் தாயார் காஜல் மேத்தா அவர்களுக்கு மகனாக பிறந்தார். இவரின் சகோதரியின் பெயர் தன்வி மேத்தா.
ஸ்டார்பக்ஸ் தொழில் வெற்றி பயணம்
தொழில் உருவான பாதை :
8 ஆம் வகுப்பு படிக்கும் போது திலக் மேத்தா அவர் விடுமுறையில் தனது மாமா கன்ஷ்யாம் பரேக்கின் வீட்டிற்குச் சென்றார், அடுத்த நாள் வீடு திரும்பியபோது, அவர் தனது கணித புத்தகத்தை மறந்துவிட்டார்.
அவருக்கு அவரது புத்தகம் மிகவும் தேவைப்பட்டது, எனவே அவர் தனது தந்தையை தனது மாமாவின் வீட்டிற்குச் சென்று புத்தகத்தை கொண்டு வரும்படி கேட்டார், ஆனால் அவரது தந்தை சோர்வடைந்து இருந்தார் ஆகையால் அவரது மாமாவின் வீட்டிற்குச் செல்ல முடியவில்லை.
எனவே திலக் விரைவு அஞ்சல் மூலம் புத்தகத்தை கொண்டு வர நினைத்தார் ஆனால் புத்தகத்தின் விலையை விட விரைவு அஞ்சல் கட்டணம் அதிகமாக இருந்தது. எனவே, குறைந்த கட்டணத்தில் ஒரே நாளில் கொரியர் டெலிவரி சேவையைத் தொடங்கும் யோசனை அவருக்கு அங்கு இருந்து தான் வந்தது.
தற்போது, அவரது மாமா கன்ஷ்யாம் பரேக் அவரது நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார் மற்றும் அனைத்து செயல்பாடுகளும் அவரால் நிர்வகிக்கப்படுகின்றன.
வீட்டு வாசலில் டெலிவரி :
Paper n parcel ஒரு ஆன்லைன் தளமாகும். இவர்கள் வாடிக்கையாளர்கள் அளிக்கும் கோரியர்களை பிக்-அப் முதல் வீட்டு வாசலில் டெலிவரி செய்வது வரை அனைத்து வகையான தேவையான, அன்றாடப் பொருட்களுக்கான டெலிவரி செய்யும் பணியை செய்து வருகின்றனர்.
100 கோடிக்கும் மேல் ஆண்டு வருவாய் கொண்ட இந்தியாவின் இளைய தொழில்முனைவோரான திலக் மேத்தாவால் நிறுவப்பட்டது. Paper n parcel கப்பல் மற்றும் தளவாடத் தேவைகளுக்கு உதவ பல்வேறு சேவைகளை வழங்குகிறது.
இது அதன் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கப்பல் மற்றும் தளவாடத் தேவைகளுக்கு சிறந்த குறைந்த அளவில் கட்டணத்தை வழங்க உதவி அவர்களின் தேவையை பூர்த்தி செய்கின்றனர்.
முதன்மை வாடிக்கையாளர்கள் :
நிறுவனத்தின் முதன்மை வாடிக்கையாளர்கள் pathology labs, boutiques மற்றும் brokerage நிறுவனங்கள் ஆகியவை அடங்கும். கூரியர் சேவைகளுக்காக ஸ்விக்கி,
உபெர் மற்றும் ஓலா போன்ற நிறுவனங்களுடன் இணைய இவர் லட்சியமாக இருக்கிறது.
Dabbawala டப்பாவாலா இவர்களுடன் இனைந்து மாதம் 10000 ரூபாய் சம்பாரித்து வருகின்றனர்.
தொழிலாளர்கள் :
Paper n parcel சொந்தமாக 400 தொழிலாளர்களும் இவர்கள் ஒரு நாளைக்கு 1200 விநியோகங்களை டெலிவிரி செய்கிறார்களாம் . 3 கிலோகிராம் பார்சலின் எடையைப் பொறுத்து ரூ 40-180 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நிகர மதிப்பு :
2022 ஆம் ஆண்டில் திலக் மேத்தாவின் நிகர மதிப்பு 50 கோடிக்கும் அதிகமாக உள்ளது, அதே சமயம் அவரது தனிப்பட்ட வருமானம் மாதம் 10 லட்சத்துக்கும் மேல் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சாதனைகள் :
அவர் TEDxல் பேச்சாளராக இருந்தார்.
ஃபோர்ப்ஸ் லீடர்ஷிப் விருது 2018 ஆம் ஆண்டு பெற்றார்.
உலகளாவிய குழந்தைப் தொழில்முனைவோருக்காக 2020 ஆம் ஆண்டில் விருது பெற்றவர்.
13 வயதே நிரம்பிய திலக் மேத்தா 2018 ஆம் ஆண்டு மும்பையில் டப்பாவாலாக்களுடன் இணைந்து ஒரு நிறுவனத்தை தொடங்கினார்.
மும்பை நகருக்குள் மட்டும் சிறு பார்சல்கள் மற்றும் கவர்களை கொரியர் நிறுவனம் போல டெலிவரி செய்தார். இந்த நிறுவனம் இப்போது வெற்றிகரமாக நடந்து வருகிறது.
இவரின் வெற்றி பாதை மிகவும் எளிது இவருக்கு தேவை பட்ட சேவை அனைவருக்கும் தேவை பட்டது. ஆனால் அதை இவர் உருவாக்க இவர் தந்தை மற்றும் இவரின் மாமா பக்க பலமாக இருந்தனர்.
இவரின் யோசனை இன்று பலரின் கனவுக்கு ஒரு உக்கமாக இருக்கிறது. உண்மையில் இவர் ஒரு முன் உதாரணம் தான் அனைவருக்கும்.