விக்ரம் எல்லோராலும் சீயான் விக்ரம் என்று அழைக்கப்படுபம் ஒரு தமிழ் நடிகர் ஆவார். 1990 ஆம் ஆண்டில் தமிழ் சினிமா துறையில் நுழைந்த இவர், இவரின் நடிப்பு திறமைகளை வளர்த்துக் கொண்டு ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், எனப் பல மொழிகளில் நடித்து வருகிறார்.
தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, 6 முறை ஃபிலிம்ஃபேர் விருது, தமிழ்நாடு மாநிலப் திரைப்பட விருது, 3 முறை விஜய் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது, விகடன் விருது என பல விருதுகளை வென்றார்.
ஒரு நடிகராகத் சினிமா துறையில் நுழைந்த அவர் பின் நாட்களில் அவர் திறமையை டப்பிங் கலைஞராகவும், பின்னணிப் பாடகராகவும், வளர்த்து கொண்டார். நடிகர் சீயான் விக்ரம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு :
தமிழ்நாட்டில் இருக்கும் பரமக்குடியை சேர்ந்த கிறிஸ்தவரான வினோத் ராஜுக்கும், இந்து மதத்தை சேர்ந்த ராஜேஸ்வரிக்கும் மகனாக 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி விக்ரம் பிறந்தார்.
இவருடைய இயற்பெயர் விக்ரம் கென்னெடி வினோத் ராஜ் என்பதாகும். இவருடைய அம்மா சப்-கலெக்டர்
இளமைப் பருவம் :
சேலம் மாவட்டத்தில் விக்ரம் பள்ளிப் படிப்பை தொடங்கினார் விக்ரம். அவர் பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த பின்னர் சினிமா துறையில் கால் பதிக்க ஆசைப்பட்டார்.
ஏனென்றால், விக்ரமின் தந்தையான வினோத் ராஜ் சினிமாவில் நடிக்க சொந்த ஊரானப் பரமக்குடியை விட்டு, வாய்ப்பு தேடி சென்னைக்கு ஓடி வந்தார். ஆனால், அவருக்கு துணைக் கதாபாத்திரங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுவே, விக்ரமுக்குள் ஒரு வெறியைத் தூண்டியது.
தனது தந்தை அடைய நினைத்த லட்சியத்தை விக்ரம் அடைய ஆசைப்பட்டார். ஆனால், அவரது விருப்பத்திற்கு, அவரது தந்தையே தடையா இருந்தார். அவர் சந்தித்தத் தோல்வியைத் தனது மகனும் சந்திக்கக் கூடாது என்று கருதி, விக்ரமை கல்லூரியில் சேர்த்து விட்டார்.
சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில், ஆங்கிலத்தில் தனது இளங்கலைப் பட்டத்தைபெற்றார். அதன் பின்னர் லயோலா கல்லூரியில் எம்.பி.ஏ சேர்ந்தார். ஒரு நாள் கல்லூரிக்குத் சக்கர மோட்டார் வாகனத்தில் சென்ற அவர், விபத்தில் சிக்கி கோர விபத்து ஆனார்.
அவரது கால் செயலிழந்து விட கூடாது என்று 23 அறுவை சிகிச்சை செய்து கொண்டு மூன்று வருடம் படுக்கையில் இருந்தார்.
திரையுலக வாழ்க்கை :
விக்ரம் அவர்களைத் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் சி. வி. ஸ்ரீதர் அவர்கள், 1990 ஆம் ஆண்டு தான் விக்ரமின் முதல் படம் வெளியானது ‘என் காதல் கண்மணி’. அதன் பின்னர், இரண்டாண்டுகள் தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் இருந்த விக்ரம் , 1994 ஆம் ஆண்டில் ‘புதிய மன்னர்கள்’ என்ற படம் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.
அப்படம், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத்தராததால், மீண்டும் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நடிக்க தொடங்கினர். 1997 ஆம் ஆண்டில், அமிதாப் பச்சன் அவர்களின் தயாரிப்பில் உருவான ‘உல்லாசம்’ என்ற படத்தில், அஜீத்குமாருடன் இணைந்து நடித்தார்.
அதன் பின்னர் பல படங்களில் நடித்து, தமிழ்த் திரையுலகில் தனக்கெனத் தனி இடத்தைத்தக்க வைத்துக் கொண்டார்.இது வரை விக்ரம் ஹிந்தி மொழியில் 2 படமும், மலையாள மொழியில் 11 படமும், தெலுங்கு மொழியில் 6 படமும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இல்லற வாழ்க்கை :
நடிகர் விக்ரம் , கேரளாவைச் சேர்ந்த பெண்ணான சைலஜா பாலக்ருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும், அக்ஷிதா த்ருவ் என்ற குழந்தைகள் பிறந்தது.
பிறப் பணிகள் :
நடிகர் விக்ரம் ‘மஜா’ படத்தில் துணை இயக்குனராகவும், பல தமிழ் மொழி படங்களுக்கு பின்னணிக் குரலும் பேசியுள்ளார்.
2000 ஆம் ஆண்டு நடிகை மீனாவுடன் இணைந்து ஒரு பாப் ஆல்பம் பாடி விக்ரம் வெளியிட்டார்.
‘ரீல் லைஃப் இன்டர்நேஷனல்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி ‘டேவிட்’ என்ற படத்தைத் தயாரித்தார்.
பொது சேவை :
சஞ்சீவனி டிரஸ்ட்டின் விளம்பரத் தூதராக இருக்கும் விக்ரம் அவரது ரசிகர் மன்றம் மூலமாக ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி எனப் பல்வேறு சமூக நலத் தொண்டுகளை செய்துவருகிறார்.
தனது ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் கண்தான முகாம் அமைத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவர் விரைவில் டிரஸ்ட் தொடங்க உள்ளார்.
விருதுகள் :
2003–பிதாமகன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.
2011 – தெய்வத் திருமகள் சிறந்த நடிகருக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதை பெற்றார்.
2011 – அவருக்கு டாக்டர் பட்டத்தை’ ‘பீப்புள்’ஸ் யுனிவெர்சிட்டி ஆஃப் மிலன்’ வழங்கி கௌரவித்தது.
இதுவரை தமிழ்நாடு மாநிலப் திரைப்பட விருதுகளான ‘சிவாஜி கணேசன் விருதை சேது, பிதாமகன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
ஃபிலிம்ஃபேர் விருதுகளை 7 முறை சிறந்த நடிகருக்காகவும் பெற்றார்.
விஜய் விருதுகளை ராவணன் மற்றும் தெய்வத் திருமகள் திரைப்படத்திற்காக சிறந்த நடிகராக வழங்கப்பட்டது.
சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதை காசி படத்திற்காக வழங்கப்பட்டது.
சர்வதேச தமிழ்ப் பட விருதை ஜெமின,ராவணன் படத்திற்காக வழங்கப்பட்டது.
விகடன் விருதை தெய்வத் திருமகள் படத்திற்காகவும் வென்றார்.