Tamil Quotes

Sivakarthikeyan History in Tamil – சிவகார்த்திகேயன் வாழ்க்கை வரலாறு

இப்போது உள்ள குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஹீரோக்களின் ஒருவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் முதல் முதலில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர், பின் தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருகிறார். சிவகார்த்திகேயன் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

சிவகார்த்திகேயன் 1985 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 தேதி திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் தாஸ் மற்றும் ராஜி அவர்களுக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தை தாஸ் காவல் துறை அதிகாரியாக இருந்தார்.

சீமான் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை :

சிவகார்த்திகேயன் திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் படித்தார். இவரின் கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களில் நடித்தும் வந்தார். பின்னர் மிமிக்ரி போன்ற தனித்திறமை கொண்டு மேடை நகைச்சுவையாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர்.

இல்லற வாழ்க்கை :

சிவகார்த்திகேயன் 27 ஆகஸ்ட் 2010 ஆம் ஆண்டு அன்று ஆர்த்தியை மணந்தார், இவர்களுக்கு 22 அக்டோபர் 2013 ஆம் ஆண்டு அன்று ஆராதனா என்ற பெண் குழந்தையும், 12 ஜூலை 2021 ஆம் ஆண்டு அன்று குகன் தாஸ் என்ற ஆண் குழந்தையும் பிறந்தனர்.

தொலைக்காட்சி :

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர். பின் ‘சூப்பர் சிங்கர்’, ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ என பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்று தனது திறமை மூலம் மக்களின் கவனத்தை பெற்று பிரபலமானவர்.

அது இது எது என்ற நிகழ்ச்சியை தொகுத்து வந்துள்ள இவர், இயக்குனர் அட்லீயின் ‘முகப்புத்தகம்’ என்ற குறும்படத்தில் நாயகனாக நடித்தார்.

திரைத்துறை :

2012-ம் ஆண்டு வெளியான ‘மெரினா’ படத்தில் நாயகனாக நடிக்க இயக்குனர் பாண்டிராஜ் அழைப்பினை தொடர்ந்து அப்படத்தில் நாயகனாக நடித்து வெள்ளித்திரையில் நடிகனாக அறிமுகமானவர்.பின்னர் அதே ஆண்டு தனுஷின் ‘3’ படத்திலும் ‘மனம் கொத்தி பறவை’ படத்திலும் நடித்து தமிழ் மக்களின் கவனத்தை கவர்ந்தவர்.

இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த படங்கள் அனைத்தும் மக்களின் ஆதரவில் வெற்றி பெற்று, இவர் தமிழ் திரைத்துறையில் ஒரு குறிப்பிடப்படும் நடிகராக சித்தரிக்கப்பட்டார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2013ம்
ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது.

2016ம் ஆண்டு ‘ரெமோ’ திரைப்படத்தில் ஒரு பெண் வேடத்தில் நடித்து புகழ் பெற்றார். பின் பல படங்கள் நடித்து தனக்கான இடத்தை பிடித்து உள்ளார்.

தயாரிப்பு நிறுவனம் :

2019-ம் ஆண்டு கனா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் அந்த படத்தினை தனது “எஸ் கே ப்ரோடுச்டின்” என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இவர் தயாரித்து தயாரிப்பாளராக தமிழ் திரைதிரையில் பணியாற்றி பிரபலமானார்.

இதனை தொடர்ந்து இவர் பல படங்களை தயாரித்தும், நடித்தும் தமிழ் திரைத்துறையில் பணியாற்றி வருகிறார்.

பாடல் :

கராத்தே படத்தின் “ராயபுரம் பீட்டர்”, காக்கி சட்டை படத்தில் “ஐம் சோ கூல்” பாடலை பாடி புகழ் பெற்றார்.அது மட்டும் இல்லாமல் பல பாடல்களை எழுதியும் உள்ளார்.

Exit mobile version