Tamil Quotes

ஷாலினி பாண்டே வாழ்க்கை வரலாறு – Shalini Pandey History in Tamil

ஷாலினி பாண்டே இந்திய நடிகை ஆவார், இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மிக சமீபத்தில் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2017 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தெலுங்கு திரைப்படமான அர்ஜுன் ரெட்டி மூலம் ஷாலினி அறிமுகமானார்.

2019 இல், அவர் 100% காதல் திரைப்படத்தின் மூலம் தனது முதல் தமிழ் படத்தில் அறிமுகமானார்.அவர் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் பிறந்து வளர்ந்தார். மகாநதி, 118, ஜெயேஷ்பாய் ஜோர்தார் மற்றும் இன்னும் சில திரைப்படங்களிலும் பாண்டே நடித்துள்ளார். இவரின் வாழ்க்கை வரலாறை தொடர்ந்து படிக்கவும்.

ஆரம்பா காலம் :

ஷாலினி பாண்டே 23 செப்டம்பர் 1993 அன்று மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். ஷாலினியின் தந்தை மத்தியப் பிரதேசத்தில் ஒரு அரசு ஊழியர்.

அவர் கிறிஸ்ட் சர்ச் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் ஜபல்பூரில் உள்ள குளோபல் இன்ஜினியரிங் கல்லூரியில் சிஎஸ்இயில் பி.டெக். படித்தார்.

இவருக்கு சினிமா மீது காதல் வந்ததால். அவர் தனது பட்டப்படிப்பை முடித்தபோது ஒரு நாடகக் குழுவில் சேர்ந்து பல நாடகங்களில் நடித்தார். அவளுடைய தந்தை அதற்கு முற்றிலும் எதிராக இருந்தார். இவர் மேடை நாடகங்களில் நடிக்கும் போதே சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார்.

விராட் கோலி வாழ்க்கை வெற்றி பயணம்

மேடை நாடகம் மற்றும் சினிமா துறை :

சாலினி பாண்டே தனது நடிப்பு திறமையை ஜபல்பூர் மேடை நாடக நடிகராக தொடங்கினார் பின் தான் இவருக்கு தெலுங்கு திரைப்படம் அர்ஜுன் ரெட்டி மூலம் திரைத்துறைக்கு வாய்ப்பு கிடைத்தது.


ஷாலினி பாண்டே இதுவரை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் ப்ரீத்தி என்ற கேரக்டரில் அறிமுகமானார்.

இது பின்னர் 2019 இல் ஷாஹித் கபூர் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் “கபீர் சிங்” மற்றும் “ஆதித்ய வர்மா” என இந்தி மற்றும் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தெலுங்கு மொழியில் சரளமாக பேச தெரியாதப்போதும் ஷாலினி பாண்டே இந்த திரைப்படத்திற்கு சொந்தமாக பின்னணி குரல் கொடுத்தார் என்பது
மதிக்கத்தக்க ஒரு விஷயம் ஆகும்.

திரை பயணம் :

அவர் ‘மகாநடி’, ‘118’, ‘இத்தாரி லோகம் ஒகேடே’ போன்ற பல்வேறு தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார்.பின் 2019 அக்டோபரில் 100% காதல் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.


2020 ஆம் ஆண்டில், அவர் தனது முதல் பாலிவுட் படமான ‘ஜெயேஷ்பாய் ஜோர்தார்’ ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்தார். இது யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்து 13 மே 2022 அன்று வெளியிடப்பட்டது.

ரஞ்சன் சாண்டல் இயக்கிய ‘பாம்ஃபாட்’ என்ற பாலிவுட் படத்திலும் பரேஷ் ராவலின் மகன் ஆதித்யா ராவலுக்கு ஜோடியாக ஷாலினி நடித்துள்ளார். அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது ஷாலினியின் கனவு என்று அவர் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

சீரியல்கள் :

சோனியின் பிரபல சீரியல்களான ‘க்ரைம் பெட்ரோல்’ மற்றும் ‘மன் மெய்ன் ஹை விஸ்வாஸ்’ போன்றவற்றிலும் ஷாலினி சில எபிசோடிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

விருதுகள் :

சினிமா துறையில் இவர் புதியவர் என்றாலும், ஷாலினி பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதன் மூலம் ஜீ சினி அவார்ட்ஸ் தெலுங்கில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றுள்ளார்.

அவர் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்காக தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளுக்கு (SIIMA) பரிந்துரைக்கப்பட்டார்.

சினிமா துறையில் இவர் போல யாருக்கும் இந்த அளவு வெற்றி ஆரம்ப காலத்தில் கிடைத்தது இல்லை. அவரைப் போல தொழில்துறையில் பலருக்கு ஆரம்பகால புகழ் கிடைக்கவில்லை.

Exit mobile version