Tamil Quotes

Sathrapathi Sivaji History in Tamil – சத்ரபதி சிவாஜி வாழ்க்கை வரலாறு

சத்ரபதி சிவாஜி மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து மன்னர் ஆவார். இளம் வயதிலேயே சிறந்த படைவீரராகவும், ஆட்சியாளராகவும் இருந்த சத்ரபதி சிவாஜி. அவருடைய படைகளுக்கு சிறந்த உத்திகளை பயிற்ச்சி அளித்து அவர்களை வைத்து பல கோட்டைகளையும், பகுதிகளையும் தன்வசம் ஆக்கினார்.

இவருடைய ஆட்சி மக்களுக்கு பொற்காலமாகக் அமைத்தது. மராட்டியர்களின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணாமாய் இருந்தவர் தான் சத்ரபதி சிவாஜி. பல இடங்களை கைப்பற்றி மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார்.

எத்தனையோ மன்னர்கள் மகாராஷ்டிராவை ஆண்டிருந்தாலும், இவரை போல் ஒரு மன்னன் வரலாற்றில் இல்லை. சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

சத்ரபதி சிவாஜி 1627 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் நாள் மகாராஷ்டிரா மாநிலம் பூனே மாவட்டதில் சஹாஜி போஸ்லேவுக்கும், ஜீஜாபாயிக்கும் மகனாகப் பிறந்தார்.

திப்பு சுல்தான் வாழ்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை :

இளமையிலேயே இராமாயணம், மகாபாரதம் போன்ற வீர கதைகளை கேட்டு வளர்ந்த இவர் பின் ஒரு வீரனாகவே ஆனார். பிறகு தாதாஜி, அமைச்சர்கள் மற்றும் படைவீரர்கள் கீழ் பயிற்சிச்பெற்ற அவர், வாள் பயிற்சி, வில் பயிற்சி, குதிரையேற்றம், யானை ஏற்றம் போன்ற அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கினார்.

1645,1647 மற்றும் 1656 ஆம் ஆண்டு பீஜபூர் பேரரசிடம் இருந்து அனைத்து கோட்டையைக் கைப்பற்றிய அவர், 1659 ஆம் ஆண்டு பூனாவில் பல இடங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவர் ஆட்சியை விருவு படுத்தினார்.

மொகலாயர்களுடன் போர் :

1661 ஆம் ஆண்டு முகலாய படைதளபதி கானுடன் நடைபெற்ற போரில் வெற்றி பெற்றார். பிறகு பல இடங்களை முறியடித்து முகலாயர்களுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தினார். 1664,1670-களில் 2 முறை சூரத்தை தாக்கினார். இதனால் சிவாஜியின் வெற்றியைத் தடுக்க அப்சல் தந்திரமான முறையில் ஒரு விருந்தை ஏற்ப்பாடு செய்து அவரை கொலை செய்ய திட்டம் திட்டினார். ஆனால் அப்சல் கானின் திட்டத்தை அறிந்த சிவாஜி, புலி நகத்தை பயன்படுத்தி அங்கு இருந்து தப்பினார்.

அதன் பிறகு முகலாய கடற்படையின் மீது தாக்குதல் நடத்தி பல
பகுதிகளை கைப்பற்றினார். கொரில்லா போர் மூலம் தந்திரமான முறையில் நான்கு புறமும் மறைந்திருந்து தாக்கி எதிரிகளை வீழ்த்தினார். இவர் தான் கோரில முறையை அறிமுக படுத்தினார். இதனால் பல கோட்டை களையும்,பகுதிகளையும் கைப்பற்றி அவருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

1674 ஆம் ஆண்டு ஜூன் 6 ராய்கட் கோட்டையில் சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டா இவர். பின்பு தென்னிந்திய மீது அவரின் கவனத்தை திருப்பி அங்கு வேலூர்,செஞ்சி கோட்டைகளையும், போர் புரிந்து கைப்பற்றினார் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

சிறந்த மனிதராகவும் ஆட்சியாளராக திகழ்ந்த சிவாஜி. அவரின் ஆட்சியில் பல மக்களுக்கான மாற்றங்களை ஏற்படுத்தி வந்தார்.அவர் அவருடைய அமைச்சர் அவையில் 8 அமைச்சர் கொண்ட அஷ்டபிரதான் என்ற குழுவை அமைத்தார்.

பிறகு அரசை முன்றகா பிரித்து இராணுவப் படை, குதிரைப்படை, கடற்படை அமைத்தார். அதுமட்டுமல்லாமல், வரலாற்று சிறப்புமிக்க பல கோட்டைகளையும் கட்டினார். அவரின் ஆட்சிக்காலத்தில் மகாராஷ்டிரா அரசு மிக பெரிய வளர்ச்சியை கண்டது.

இறப்பு :

சத்ரபதி சிவாஜி அவர்கள் தன்னுடைய ஆட்சியில் சிறந்து விளங்கி. கடைசியில் இரத்தப்பெருக்கு நோயினால் பாதிக்கப்பட்டு அவரின் 53 வது வயதில் 1680 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி மரணம் அடைந்தார்.

இவர் ஆட்சியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கோட்டைகளைக் கட்டினார். இவர் இடம் இருந்த அனைத்து துறையிலும் சிறந்த விளங்கினார் எனப் பல வரலாற்று
ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

காலவரிசை :

1627 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் நாள் மகாராஷ்டிரா மாநிலம் பூனே மாவட்டதில் பிறந்தார்.

1664 ஆம் ஆண்டு சூரத்தை தாக்கி கொள்ளையடித்தல்.

1674 ஆம் ஆண்டு ஜூன் 6 ல் ராய்கட் கோட்டையில் முடிசூட்டிக் ராஜாவாக ஆனார்.

1680 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி 53 வது வயதில் மரணம் அடைந்தார்.

Exit mobile version