Tamil Quotes

S.Ve.Sekar History in Tamil – எஸ். வி. சேகர் வாழ்க்கை வரலாறு

எஸ். வி. சேகர் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற மேடைநாடகர் மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 5000 நாடகங்களுக்கும் மேல் நடித்து உள்ளார். 20 வது நாடகங்களை தயாரித்தும் உள்ளார்.

இவருடைய நாடகம் அனைத்தும் நகைச்சுவையாகவே இருக்கும். பிறகு 1979 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற தமிழ் படம் மூலம் அறிமுகம் ஆனார். பின் 90-க்கும் அதிகமான படம் நடித்து உள்ளார். பிறகு சில படத்தில் ஹீரோவாகவும் நடித்து உள்ளார் இவர்.

பிறகு 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். எஸ். வி. சேகர் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

1950 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் நாள் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் என்ற இடத்தில் எஸ். வெங்கடராமன் என்பவருக்கு மகனாக எஸ். வி. சேகர் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

இந்து மேல்நிலைப்பள்ளியில் படித்து கொண்டு இருக்கும் போது நாடகக்கலையில் ஈடுப்பாடு கொண்டவராக இருந்த சேகர். அவர் தந்தையுடன் சேர்ந்து சில நாடகப் பணிகளை செய்துவந்தார். அப்படியே விவேகானந்தா கல்லூரியில் பி.யூ.சி படித்தார். அதன் பிறகு, இயந்திரவியல் துறையில் படிப்பை முடித்தார்.

ஆரம்ப காலம் :

ஆரம்ப காலத்தில் ஒலிப்பதிவாளராக வாழ்க்கையைத் தொடங்கிய சேகர். பின் தான் நாடகக் கலையில் ஆர்வம் ஏற்ப்பட்டு அவர் தந்தை நடத்திவந்த ‘கற்பகம் கலாமந்திர்’ என்ற நாடக நிறுவனத்தில் இணைத்தார் .

பின் இலங்கை வானொலிக்காக சுமார் 275 க்கும் மேற்பட்ட நிகழ்சிகளை தயாரித்துள்ளார். இதை தொடர்ந்து அவர், ‘நாரதர்’ என்ற தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

நாடகத்துறையில் அவரின் பயணம் :

1974 ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு நாடகக் குழுவை தொடங்கி அவர் 5000 மேடை நாடகங்களை நடத்தியுள்ளார். அமெரிக்கா, கனடா, துபாய், சிங்கப்பூர், மலேசியா என பல நாடுகளில் மேடை நாடகம் செய்து உள்ளார்.

நாடகக்கலையில் சிறந்து விளங்கிய எஸ். வி. சேகர் அவர்கள் நாடக சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டார். மேலும், மைலாப்பூர் அகாதமி அமைப்பு இவருக்கு மூன்று வருடம் ‘சிறந்த சிரிப்பு நடிகராக’ தேர்தெடுத்தது. கலைமாமணி, கலைவாணர் போன்ற சிறந்த விருதுகளையும் பெற்றுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை :

எஸ். வி. சேகர் அவர்கள், உமா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு, அனுராதா என்கிற மகளும், அஷ்வின் என்கிற மகனும் உள்ளனர்.

சினிமாவில் அவருடைய பயணம் :

ஆரம்பத்தில் நாடகத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் கே. பாலச்சந்தர் மூலமாக திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் இவர் நடிக்கவில்லை . ஆனால் 1979 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘வறுமையின் நிறம் சிவப்பு’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடிகராகத் தன்னுடைய பெயரைப் பதிவு செய்தார்.

அதை தொடர்ந்து 90 திரைப்படங்களுக்கு மேல் நடித்து பிற பிரபலம் ஆனார். இவர் நடிக்கும் அனைத்து படங்களும் நகைச்சுவையாக தான் இருக்கும்.

அரசியல் :

2006 ஆம் ஆண்டு அ.தி.மு.க கட்சியில் சேர்ந்த இவர். அதே ஆண்டில் மாநில சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார்.

பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் நாள் அ.தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பாரதிய ஜனதா கட்சி மறைமுக ஆதரவாளர்.

விருதுகள் :

1991 ஆம் ஆண்டு கலைவாணர் பதக்கம்.

1993 ஆம் ஆண்டு கலைமாமணி பட்டம்.

மைலாப்பூர் அகாதமி மூலம் சிறந்த நகைச்சுவையாளர் விருது மூன்று முறை.


Exit mobile version