உங்கள் துன்பங்களை நொடியில் போக்கும் வெற்றிலை!
விஷேச வீடுகளிலும் சாப்பாடு சாப்பிட்ட பிறகு சாப்பிடும் பொருளாகவும் மற்றும் பல மருத்துவ குணம் நிறைந்த பொருளாகவும் வெற்றிலை விளங்குகின்றது.

வெற்றிலை காம்பில் பார்வதி தேவியும், வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும் வாசம் செய்வதாய் ஐதீகம்.

அனைத்து சுபகாரியங்களிலும் முக்கிய பங்கு வகிக்கும் வெற்றிலையை எந்த ராசிக்காரர்கள் என்ன செய்தால் கஷ்டங்கள் தீரும் என்று காணலாம்.
மேஷ ராசி :

வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் கிழமை முருக பெருமானை வழிபட்டு சாப்பிட்டு வர துன்பங்கள் அகலும்.
ரிஷப ராசி :

வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகு தெய்வத்தை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.
மிதுன ராசி :

வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டு வந்தால் துன்பங்கள் தீரும்.
கடக ராசி :

வெற்றிலையில் மாதுளை பழம் வைத்து வெள்ளிக் கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம் விலகும்.
சிம்ம ராசி :

வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டு வர கஷடம் விலகும்.
பசு சாணத்தையே தங்கமாக மாற்றிய ஞாயிற்றுக்கிழமை விரதம் பற்றி தெரியுமா?கன்னி ராசி :

வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.

துலா ராசி :

வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளி கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.
விருச்சிக ராசி :

வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.
தனுசு ராசி :

வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழ கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
மகர ராசி :

வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
கும்ப ராசி:

வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
மீன ராசி :

வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் நோய் தீரும்.