Tamil Quotes

Raja Ram Mohan Roy History in Tamil – ராஜா ராம் மோகன் ராய் வாழ்க்கை வரலாறு

ராஜா ராம் மோகன் ராய் அவர்கள் நவீன இந்தியாவை உருவாக்கியவர். இந்தியாவில் முதன் முதலில் இந்திய சமூக சமய சீர்திருத்த இயக்கமான ‘பிரம்ம சமாஜத்தை’ தொடங்கியவர்.

இந்தியா நாட்டில் சாதி மறும்பு, உடன்கட்டை என்ற பழக்கத்தை மாற்ற நினைத்தார். ராஜா ராம் மோகன் ராய் பெரும் கல்வியாளராகவும், சுயாதீன சிந்தனையாளராகவும் இருந்தார்.

அவர் ஆங்கிலம், அறிவியல், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கினார். இதனால் தான் ராஜா என்ற பட்டத்தை அவருக்கு முகலாய பேரரசர் வழங்கினார்.

பெண்ணுரிமை, சாதிய ஒழிப்பு சீர்திருத்தவாதியின் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

மே 22, 1772 ஆம் ஆண்டு பிறந்தார் ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், வங்காளத்திலுள்ள ஹூக்ளி மாவட்டத்தில் தந்தை, ராம்காந்தோ ராய் மற்றும் தாய் தாரிணி அவர்களுக்கு மகனாக பிறந்தார்.

கம்பர் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை :

15 வயதில் உயர் படிப்புகளுக்காக பாட்னா மாநிலத்திற்கு சென்றார்பங்களா பாரசீகம், அரபு மற்றும் சமஸ்கிருத மொழிகளைக் கற்றுக்கொண்டார். இவரின் தந்தை ஆச்சாரமான இந்துமத பிராமணராக இருந்தாலும். ராஜா ராம் மோகன் ராய் இவருக்கு எதிர்ரகவே இருந்தார்.


மேலும் சமூக மதவெறி, சாதி வெறி மற்றும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராடினார். இதுவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடுகளுக்கு காரணம். இந்த பிரச்சனை காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் இமயமலையில் வழியறியாமல் அலைந்துத் திறிந்து, திபெத் சென்றார்.

தொழில் :

பின் பல நாட்கள் கழித்து வீடு திரும்பிய அவருக்கு, அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். ஆனால், இது அவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. திருமணத்திற்குப் பின்னும் மோகன் ராய் வாரணாசி சென்றார்.

அங்கு அவர் வேதங்கள், இந்துமத தத்துவங்களை படித்தார். 1803 ஆம் ஆண்டு இவரின் தந்தை இறந்துவிட்டார், இதனால் கொல்கத்தாவில் உள்ள
ஒரு வட்டிக்கடையில் பணி புரிந்தார். 1809 ஆம் ஆண்டு முதல் 1814 வரை, கிழக்கு இந்திய நிறுவனத்தின் வருவாய்த் துறையில் பணியாற்றினார்.

சீர்திருத்தப் பணிகள் :

சமூகத்தின் அவலநிலையை கண்டு இவர் 1814 ஆம் ஆண்டு சமூக மாற்றம் மற்றும் சமய சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் முயற்சியாக ஆத்மிய மக்களவை என்ற அமைப்பை அமைத்தார்.

தொடர்ந்து பெண்கள் உரிமைக்காகவும், விதவைகள் மறு திருமணம் செய்யவும் பெண்களுக்கான சொத்து உரிமைக்காகவும் போராட்டம் செய்தார்.

இவர் உடன்கட்டை ஏறுதலை தீவிரமாக எதிர்த்தார். பெண்களுக்கு கட்டாய கல்வியை தர வேண்டும் என்று ஆதரித்தார்.

இந்திய கல்வி முறையை விட ஆங்கில மொழி கல்வி நல்லது என்று நம்பினார், பின் 1822 ஆம் ஆண்டு ஆங்கிலக் கல்வியின் அடிப்படையில் ஒரு பள்ளியை நிறுவினார்.

பிரம்மா சமாஜ் :

மத பாசாங்குகளை அம்பலப்படுத்தவும், இந்து மத சமூகத்தின் மீது கிறித்துவம் அதிகரித்து வரும் செல்வாக்கை செரிசையவும் 1828 ஆம் ஆண்டு பிரம்ம சமாஜம் என்ற அமைப்பை தொடங்கினார்.

இந்த அமைப்பை வைத்து சாதி அமைப்பு, குழந்தை திருமணம், சிசுக்கொலை, தீண்டாமை என பல சமுக பிரச்சனையை சரி செய்தார். மனிதர்களிடையே அன்பு செலுத்த வேண்டும் என்றும், சிலை வழிபாடு வேண்டாம் என்றும் விலங்குகளை பலி கொடுப்பது போன்ற பிற சடங்குகளை நிறுத்த போராடினார்.

அவரது அனைத்து முயற்சிகளுக்கும் வெற்றிக் கிட்டும் வகையில் 1833 ஆம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றி, அதன் மூலம் சதி முறையை ஒழித்தார்.

இறப்பு :

மூளைக்காய்ச்சல் காரணமாக செப்டம்பர் 27, 1833 அன்று காலமானார் ராம் மோகன் ராய்.

காலவரிசை :

1809 ஆம் ஆண்டு முதல் 1814 வரை கிழக்கு இந்திய நிறுவனத்தின் வருவாய்த் துறையில் பணியாற்றினார்.

1814 ஆம் ஆண்டு ஆத்மிய மக்களவையை உருவாக்கினார்.

1822 ஆம் ஆண்டு ஆங்கிலக் கல்வியின் அடிப்படையில் ஒரு பள்ளியை நிறுவினார்.

1828 ஆம் ஆண்டு பிரம்ம சமாஜம் என்ற அமைப்பை நிறுவினார்.

1833 ஆம் ஆண்டு மூளைக்காய்ச்சல் செப்டம்பர் 27, 1833 அன்று காலமானார்.

Exit mobile version