Tamil Quotes

P.P Reddy Success story in Tamil – பி.பி. ரெட்டி தொழில் வெற்றி பயணம்

இந்த நாட்டில் பல தொழிலதிபர்கள் உருவாகி கொண்டே இருக்கிறார்கள் ஆனால் அவர்களில் பெரும்பாலும் பணக்கார பிள்ளைகளாகவே அவர்கள் வாழ்க்கையை தொடங்க ஆசைப்படுவார்கள்.


ஆனால் எங்கே பி.பி. ரெட்டி என்பவர் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து 1989 இல் நகராட்சிகளுக்கு சிறிய குழாய்களை அமைக்க ஒரு நிறுவனத்தை தொடங்கி அங்கு வசிக்கும் மக்களுக்கு தரமான சாலைகளை அமைத்து கொடுத்தது மட்டும் இல்லாமல் பல திட்டங்களை தொடங்கி உள்ளார்.

2006 ஆம் ஆண்டு இவர் நிறுவனத்தின் பெயரை மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் என மாற்றினார். இவரின் கடின உழைப்பு மற்றும் அவர் வாழ்க்கையின் வெற்றி ரகசியத்தை பற்றி மேலும் தொடர்ந்து படிக்கவும்.

ஆரம்ப கால வாழ்க்கை :

தெலுங்கானா மாநிலத்தில் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் 30 ஆகஸ்ட் 1957 ஆம் ஆண்டு பிறந்த பிபி ரெட்டி.

சிறு வயதில் இருந்தே கடின உழைப்பாளி இவருக்கு சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் ஆசைப்பட்டார். பின் பல நாள் இரவு பகலா உழைத்தார்.

இதன் பலனாக இவருக்கு 1989 ஆம் ஆண்டு பைப் அமைப்பதற்காக மேகா இன்ஜினியரிங் எண்டர்பிரைசர்ஸ் என்னும் நிறுவனத்தை நிறுவினார்.

இவரின் வாழ்க்கை வரலாறு நிச்சயம் நமக்கு ஆச்சிரியம் கொடுக்கும். காரணம் இவர் தொழில் தொடங்கிய அடுத்த ஆண்டே சாலை அமைப்பது, அணை கட்டுவது, இயற்கை எரிவாயு போன்ற பல தொழிலை தீவிரமாக செய்தார்.

பின் அவரது மருமகன் கிருஷ்ணா ரெட்டி 1991 ஆம் ஆண்டு இவருடன் இணைந்த இவருக்கு உதவியாக தொழிலை மேம்படுத்தி வருகிறார்.

36 வருடத்திற்கு முன்பு வெறும் 2 தொழிலாளிகளை வைத்து தொழிலை தொடங்கிய இவர் இன்று இந்தியா முழுவதும் பல தொழில்களை செய்து வருகிறார்.

லுடோ கிங் விகாஷ் ஜெய்ஸ்வால் தொழில் வெற்றி பயணம்

14 பில்லியன் டாலர் :

இவர் வறட்சியால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் இவர் நிறுவனம் லிமிடெட் சுமார் 14 பில்லியன் டாலர் செலவில் இந்தியாவின் மிகப்பெரிய லிப்ட் பாசனத் திட்டத்தைக் அமைத்தார்கள்.


இத்திட்டம் 2019 ஆம் ஆண்டு வெளியானது. இதன் முக்கிய துவம் வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களில் இவர்கள் திட்டத்தின் மூலம் ஏரி,குளம் போன்ற இடத்தில் நீர் சேர்ப்பது தான்.

அது மட்டும் இல்லாமல் எலக்ட்ரிக் பஸ் திட்டத்தை Olectra Greentech, மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்-இன் இணைந்து நிறுவி வருகின்றனர். இவர்கள் நிறுவனத்திற்கு கீழ் பல நிறுவனங்கள் இருக்கிறது.

இவரின் நிறுவனம் இந்தியாவின் மிகவும் முக்கியமான நிறுவனமாக மாறியுள்ளது.

உலகத்துல இருக்க பலரின் வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது கரடுமுரடான பாதை கடக்க முடியாத சோகம் கூட இருக்கலாம்.

ஆனா இவரின் வாழ்க்கை பலருக்கும் ஒரு உத்வேகமாக உள்ளது. இவரின் சிறு வயதில் உடுத்த உடை இல்லாமல் உண்ண உணவு இல்லாமல் இவர் இருந்து உள்ளார்.

ஆனால் இவரின் கடின உழைப்பு ஏழ்மையில் இருந்து, முன்னேற உதவியது பிபி ரெட்டியின் பலமே அவரின் நம்பிக்கை தான் இவரின் சொத்து மதிப்பு இன்று 33,113 கோடி ரூபாய்.

மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்-இன் தலைவர். இவர் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 43வது இடத்தைப் பிடித்து இருக்காரு.

இந்த நிறுவனம் வருங்காலத்தில் இந்தியாவின் முக்கிய நிறுவனத்தின் டாப் 10 இடத்தை பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இவர் சிறு வயதில் போராடிய போராட்டம் பலருக்கும் ஒரு படமாக உள்ளது. சாதிக்க வேண்டும் இவரின் மந்திரம் இது தான்.

இன்று இவருக்கு இருக்கும் செல்வாக்கு யாருக்கும் கிடைக்காத இடம். இவரின் பிறந்தநாள் விழா வந்தாலே பல திரைபிரபாலங்கள் இவரின் வீட்டு முன் வந்து நிற்பார்கள்.

உனக்கு வேண்டும் இடத்தை நீயே பிடி எது போதும் எது போதாது என்பதை நீயே முடிவு செய்.

Exit mobile version