Tamil Quotes

Parag Agrawal Success Story – பராக் அக்ரவால் வெற்றி பயணம்

இந்தியாவில் பிறந்த பராக் அக்ரவால், மும்பை ஐஐடியில் பிடெக் பிரிவில் கம்யீட்டர் சைன்ஸ் பயின்றார். பின்னர் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கேயே பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி பின் அங்கேயே குடியுரிமை பெற்று குடியேறினார்.

பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம், யாஹூ நிறுவனங்களில் சிறிய அளவிலான எஞ்சினியர் தொடங்கி பெரிய அளவிலான டீம் லீடர் பொறுப்புகளை கூட வகித்து இருக்கிறார். இன்று டுவிட்டரின் சிஇஓவாக(CEO) பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பராக் அக்ரவால் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

தொடக்கம் :

அகர்வால் இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் மே 21 ஆம் நாள் 1984 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை இந்திய அணுசக்தித் துறையில் மூத்த அதிகாரி மற்றும் அவரது தாயார் மும்பையில் உள்ள வீர்மாதா ஜிஜாபாய் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார்.

2001 இல், அவர் அணுசக்தி மத்திய பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரியில் இரண்டாம் நிலை மற்றும் மூத்த இடைநிலைப் படிப்பை முடித்தார்.

2005 ஆம் ஆண்டில், இந்தியாவிலுள்ள மிக சிறப்பான ஐஐடி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி பாம்பேவில் பரக் அக்ராவல் இளங்கலை பட்டத்தை முடித்தார்.

அதன்பின்னர் 2011ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழக்கத்தில் கணினி அறிவியியலில் முனைவர் பட்டம் பெற்றார். அந்த சமயத்தில் யாஹூ, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பயிற்சி பெறும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அதன்பின்னர் 2011-ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தில் விளம்பரம் தொடர்பாக செயல்படும் பொறியியாளராக பணியில் சேர்ந்தார்.

சத்ய நாடெல்லா வெற்றி பயணம்

ட்விட்டர் நிறுவனம் :

அதன் பின்னர் ட்விட்டர் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் பணியாற்றினார். அப்போது ட்விட்டர் தளத்தின் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தியதில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு.

குறிப்பாக பயனாளர்களுக்கு ஏற்ப அவர்களுக்கு ட்வீட்களை காட்டும் செயற்கை நுண்ணறிவு திறனை இவர் மேம்படுத்தினார். அது ட்விட்டர் தளம்
வாடிக்கையாளர்களுக்கு மிகவும் கவர்ந்த தளமாக மாற முக்கியமாக உதவி செய்தது.

குடும்பம் :

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அக்ரவாலின் மனைவி, வினிதா அகர்வாலா. இருவருக்கும் 2016-ல் திருமணம் முடிந்தது.

தற்போது கலிபோர்னியாவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் வசிக்கும் இந்தத் தம்பதிக்கு அன்ஷ் என்ற மகன் உள்ளார்.

பராக் அக்ரவாலின் மனைவி வினிதா அகர்வாலா அடிப்படையில் ஒரு மருத்துவர். தற்போது ஸ்டான்ஃபோர்ட் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் துணை மருத்துவப் பேராசிரியராக உள்ளார்.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலையும், ஹார்வர்ட் மெடிக்கலில் ஸ்கூலில் எம்.டியும் முடித்துள்ளார். தொடர்ந்து, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உயிர் இயற்பியலில் பி.எச்டி பட்டமும் பெற்றுள்ளார்.

டுவிட்டரின் சிஇஓ :

சர்வதேச நிறுவனங்கள், முக்கியமாக அமெரிக்காவின் டாப் நிறுவனங்களில் இந்தியர்கள்தான் சிஇஓ உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.


மைக்ரோசாப்ட் சிஇஓவாக சத்யா நாடெல்லா, கூகுள் சிஇஓவாக தமிழரான சுந்தர் பிச்சை, ஐபிஎம் உள்ளிட்ட மற்ற பெரிய நிறுவனங்களின் சிஇஓவாகவும் இந்தியர்களே உள்ளனர்.


அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்பத் தலைவர் ஆக இருந்த ஆடம் அப்பதவியில் இருந்து விலகியதை அடுத்து மார்ச் 8, 2018ல் பராக் அக்ரவால் ட்விட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) பொறுப்பேற்றார்.

2021 நவம்பரில் பராக் அகர்வால், டுவிட்டரின் சிஇஓவாக(CEO) பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிக்கு காரணம் :

இவர் வெற்றிக்கு காரணம் இவரின் படிப்பு மற்றும் உழைப்பு என்று பலரும் சொல்கிறார்கள்.

சொத்தின் நிகர மதிப்பு :

இவர் உடைய மாத வருமானம் 7 கோடி. இவர் உடைய மொத்த சொத்து மதிப்பு 290 கோடிகளுக்கு மேல்.

Exit mobile version