Tamil Quotes

பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் வாழ்க்கை வரலாறு – P. T. R. Palanivel Thiagarajan History in Tamil

தமிழ் நாட்டை சேர்ந்த பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தமிழக அரசியல்வாதியும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். இவரது தந்தையான மறைந்த பி. டி. ஆர். பழனிவேல் ராஜனும் அரசியல்வாதி.

இவர் 2016 ஆண்டின் தமிழக சட்டமன்றத் தேர்தலில், மதுரை மத்தி தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 2021 தமிழ்நாடு
சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் மதுரை மத்தி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார்.

இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக நிதி அமைச்சசராக பதவியேற்றார். அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

மார்ச் 7 ஆம் நாள் 1966 ஆம் ஆண்டு தந்தை பி. டி. ஆர். பழனிவேல் ராஜன் மற்றும் தாய் ருக்மணி என்பவருக்கும் மதுரையில் மகனாக பிறந்தார்.

இவர் தந்தை 1967 ஆம் ஆண்டில் தேனி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் திமுக வில் முக்கிய நபராக இருந்தார்.

தேவிகா ராணி வாழ்க்கை வரலாறு

ஆரம்ப காலம் :

படிப்பில் மிகவும் சிறந்து விளங்கிய தியாகராஜன் தன் பள்ளி படிப்பை தி லாரன்ஸ் பள்ளி, லவ்டேல் மற்றும் மதுரை விகாசா பள்ளி ஆகியவற்றில் பள்ளிப் படிப்பைத் முடித்தார்.

பின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் வேதியியல் பொறியியலில் பட்டம் பெற்றார். பின்னர் செயல்பாட்டு ஆராய்ச்சியில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றார்.


பஃபலோ பல்கலைக்கழகத்தில் மனித காரணிகள் பொறியியல் / பொறியியல் உளவியல் கற்றார். பின்னர் எம்ஐடி ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் நிதி நிர்வாகத்தில் எம்பிஏ முடித்தார்.

திருமண வாழ்க்கை :

இவரது மனைவியின் பெயர் மார்கரெட் தியாகராஜன் ஆவார். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு பழனிதேவன் ராஜன் மற்றும் வேல் தியாகராஜன் ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.

வேலை :

படிப்பை முடித்த பிறகு, 1990 -ல் செயல்பாடுகள் மற்றும் அமைப்பு மேம்பாடு தொடர்பான தொழிலில் ஈடுபட்ட அவர், 2001 -ல், அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கித்துறை நிறுவனங்களில் ஒன்றான லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் வர்த்தகம் மற்றும் கூட்டுச் சேவை மேலாளராக பணிபுரிந்தார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு அதிலிருந்து விலகிய அவர், 2008 ஆம் ஆண்டு
ஆஃப்ஷோர் கேபிடல் மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் தலைவராக ஆனார். பின்னர் சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் பணிக்குச் சேர்ந்து, அந்த வங்கியின் நிர்வாக இயக்குநராகவும் உயர்ந்தார்.

2014 ஆம் ஆண்டு தனது பணியிலிருந்து விலகி, அரசியலில் ஈடுபடத் துவங்கிய இவர், நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறையில் சுமார் 20
ஆண்டுகள் சர்வதேச அளவிலான அனுபவத்தைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் :

அரசியல் குடும்பத்தில் பிறந்ததால் இவருக்கு அரசியல் அழைப்பு வந்தது. இதனால் இவர் 2016 ஆண்டின் தமிழக சட்டமன்றத் தேர்தலில், மதுரை மத்தி தொகுதியில் இருந்து தி.மு.க சார்பில் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் மதுரை மத்தி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார்.


இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக நிதி மற்றும் மனிதவளத் துறை அமைச்சசராக பதவியேற்றார்.

விமர்சனம் :

செப்டம்பர், 2021-இல் சரக்கு மற்றும் சேவை வரிகள் தொடர்பாக லக்னோவில் நடைபெற்ற குழு கூட்டத்தில் தமிழகம் சார்பாக பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளாததது குறித்து சமூக ஊடகங்களில் இவர் கூறிய வளைகாப்பு விழாவுக்கு சென்றதாக கூறினார்.

தீவிர பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பாளர்.

மதுரை மீனாட்சி அம்மன் :

வாரம் அல்லது மாதம் ஒரு முறை அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வார். தீவிர கடவுள் பக்தி உள்ளவர் இவர்.

Exit mobile version