Tamil Quotes

Mayawati History in Tamil – மாயாவதி வாழ்க்கை வரலாறு

மாயாவதி என்ற பெயரை நாம் அனைவரும் கேள்விப்பட்டு இருக்க வாய்ப்பு உண்டு. இவர் உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல் பெண்ணாக முதலமைச்சர் ஆனார். பின் இந்தியாவின் சக்தி வாய்ந்த அரசியல் தலைவராகவும் இருந்தார்.

மூன்று முறை உத்திரப்பிரதேச முதல்வராகப் இருந்தார், உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம் பெற்றார். இந்தியாவின் முதல் தலித் பெண் முதலமைச்சர் என்ற பெருமையும் பெற்ற மாயாவதியின் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

1956 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் நாள் புது தில்லி மாநிலத்தில் பிரபு தாசுக்கும், ராம் ராதிக்கும் இரண்டாவது பெண் குழந்தையாக மாயாவதி பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

இவர் ஆரம்ப கல்வியை அரசு பள்ளயில் தொடங்கினார். பின் 1975 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்பையும் மற்றும் 1976 ஆம் ஆண்டு பி.எட் பட்டப்படிப்பையும் முடித்தார்.


சமூகத்தின் மீது உள்ள அக்கறையால் 1983 ஆம் எல்.எல்.பி பட்டம் பெற்றார். பின் ‘இந்தியன் அட்மினிஸ்ட்ரேஷன் சர்வீஸ் தேர்வுக்கும்’ படித்துவந்தார். பிறகு 1977 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராமுடன் ஒரு சந்திப்பு ஏற்ப்பட்டது. அது தான் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது எனக் கூறலாம்.

அரசியல் வாழ்க்கை :

பகுஜன் சமாஜ் கட்சி 1984 ஆம் ஆண்டு அம்பேத்கார் கொள்கையை கொண்டு உருவாக்கப்பட்டது. சிறுவயதில் மாயாவதி ஆவேசப் பேச்சால் ஈர்க்கப்பட்ட கன்சிராம் , மாயாவதியை கட்சியில் இணைத்துக்கொண்டார். இந்த கட்சி ஆதி திராவிடர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி என்பதால். பணியை துறந்த அவர், முழு நேர கட்சி உறுப்பினராகவும் ஆனார்.

பிறகு கன்சிராமின் மாயாவதியை 1984 ஆம் ஆண்டு அவரின் முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்க வைத்தார். இவர் பல கட்சி மேடைகளில் ஆற்றிய ஆவேசப் உரை, அணைத்து மக்களையும் கவர்ந்தது. பல தோல்வியை சந்தித்த அவர். 1989 ஆம் ஆண்டு முத்த பொதுதேர்தலில் வெற்றிபெற்றார்.

முதல்வராக மாயாவதி :

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் அரசியல் வாழ்க்கையில் முழு கவனம் செலுத்திய இவர், 1995 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி உத்திர பிரதேச மாநிலத்தின் 39 வயதில் முதல்வராக பொறுப்பை ஏற்றார்.

பல முயற்ச்சிக்கு பிறகு 2001 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் பொறுப்பையும் ஏற்றார்.

பின் 2002 ஆம் ஆண்டுக்கு பிறகு, வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு என பல பிரச்சனைகளை சந்தித்தார். 2007 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 206 தொகுதிகளில் வெற்றி பெற்று அவர் மீண்டும் மாநில முதலமைச்சராக ஆனார்.

அம்பேத்கர் சிலையை பல இடங்களில் நிறுவினார் . அதில் அவருடைய சிலையையும் அவரே நிறுவினார் . இதைத் தவிர, அவருடைய கட்சியின் அடையாளத்தைக் குறிக்கும் யானை சின்னத்தை மாநிலம் முழுவதும் வைத்தார்.

மாயாவதியின் குற்றச்சாட்டுகள் :

இவர் முதல்வர் ஆனா பின் மக்களுக்குத் திட்டங்களை செய்யாமல் வெறும் சிலைகளையும், பூங்காக்களையும் சுயநலமாக வைத்து கேவலமாக செயல் பட்டார்.

இவரை உலகின் மிகப்பெரிய ஊழல்வாதி என நேரடியாக எதிர் கட்சி கூறியது. சொத்துகுவிப்பு வழக்கு எழுந்தது.

நொய்டாவில் 30 யானை சிலைகளையும் நிறுவி அரசு பணத்தை சட்ட விரோதமாக செலவு செய்தார்.

இவர் தனது இளம் அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி சாதனை படைத்த மாயாவதியின் அரசியல் பயணம் இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகக் கருதப்படுகிறது.

காலவரிசை :

1989 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 13 தொகுதிகளில் வெற்றி.

1995 ஆம் ஆண்டுஉந்திரபிரதேச முதல்வராக தேர்தெடுக்கப்பட்டார்.

1997 ஆம் ஆண்டுமீண்டும் முதல்வராக பதவியேற்றார்.

2002 ஆம் ஆண்டு முதல்வராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.

2007 ஆம் ஆண்டு உந்திரபிரதேச முதல்வராக மீண்டும் தேர்தெடுக்கப்பட்டார்.

Exit mobile version