Tamil Quotes

Mahatma Gandhi in Tamil – தேச தந்தை மகாத்மா காந்திஜியின் வாழ்க்கை வரலாறு

Mahatma Gandhi
Mahatma Gandhi

Mahatma Gandhi in Tamil – இந்தியாவின் தேச தந்தை என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்திய விடுதலைக்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் என்ன பேசப்பட வேண்டும் என்பதை இந்தியாவிலிருந்து தீர்மானித்தவர் மகாத்மா காந்தி. அவரின் வாழ்க்கை பற்றிய முழுமையான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்……

பிறப்பு மற்றும் இளமை பருவம்:

மகாத்மா காந்தி குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் 1869-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் கரம்சந்த் தயார் புத்திலி பாய். காந்திஜியின் தந்தை போர்பந்தரில் திவானாக பணியாற்றி வந்தார். இவருடைய தாய் மொழி குஜராத்தி.

நான் விரும்பும் தலைவர் ஜவஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு – Jawaharlal Nehru History in Tamil

பள்ளியில் படிக்கும் போதே நேர்மையான மாணவனாக விளங்கிய காந்தி தன் 13-ஆவது வயதில் கஸ்துரி பாய் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். தன் 18-வயதில் உயர்கல்வி பயில இங்கிலாந்து சென்ற காந்தி பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் படிப்பை தேர்ந்தெடுத்து படித்தார். படிப்பை முடித்து இந்திய திரும்பிய காந்தி அப்போதைய பம்பாயில் (மும்பை) வழக்கறிஞராக பணியாற்றினார்.

தென்னாபிரிக்க பயணம் ஏற்படுத்திய மன மாற்றம்:

பம்பாயில் பணியாற்றி வந்த காந்திக்கு 1893-ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் பணி புரிய ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதனையேற்று தென் ஆப்ரிக்கா சென்ற காந்தி அங்கு சந்தித்த நிகழ்வுகள் அவரின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வுகள் தான் பின்னாளில் அவர் ஒரு மாபெரும் சுதந்திர போராட்ட வீரராக காரணமாக அமைந்தது.

தென் ஆப்ரிக்காவில் அவர் வழக்கறிஞராக பணியாற்றி வந்த போது கறுப்பினர்கள் மற்றும் இந்தியர்கள் நீதி மன்றத்தில் வாதாடும் பொது தலைப்பாகை அணிந்துகொண்டு வாதாட கூடாது என்று தடை விதிக்கபட்டது. தென் ஆப்ரிக்க ரயில்களில் வெள்ளையர்களை தவிர யாரும் முதல் வகுப்பில் பயணம் செய்ய கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இவையெல்லாம் அவர் மனதில் விடுதலை உணர்வை தட்டி எழுப்பியது. மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதா என கொதித்தெழுந்தார்.

தென் ஆப்ரிக்காவில் கறுப்பின மக்களும் இந்திய மக்களும் படும் துன்பங்களை சகித்துக்கொள்ள முடியாமல், அவர்களுக்கான உரிமைகளை பெற்று தர 1894-ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி அவரே தலைமையேற்று நடத்தினார். அகிம்சை வழியில் பல போராட்டங்களை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பெற்று தந்தார்.

இந்த கட்டுரையை கீழ்கண்டவாறு இணையத்தில் தேடலாம் :

காந்தி கட்டுரை, காந்தி கட்டுரைகள், காந்தி கட்டுரை தமிழ், மகாத்மா காந்தி கட்டுரை, மஹாத்மா காந்தி கட்டுரை, காந்தி வரலாறு கட்டுரை, gandhi history in tamil, mahatma gandhi history in tamil, mahatma gandhi biography in tamil, gandhi adigal katturai in tamil, gandhi adigal patri katturai in tamil, mahatma gandhi parents name in tamil, mahatma gandhi patri katturai.

இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்தியின் பங்கு:


தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய காந்தி இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து பணியாற்ற தொடங்கினார். 1921-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட காந்தி அகிம்சை வழியில் பல போராட்டங்களை முன்னெடுத்து மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டி ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு நெருக்கடி கொடுத்தார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு – Veerapandiya Kattabomman History in Tamil

வாளேந்தி போரிட்ட இந்திய மன்னர்களையும் துப்பாக்கி ஏந்தி போரிட்ட நேதாஜி போன்ற வீரர்களையும் எளிதாக கையாண்ட ஆங்கிலேய அரசு காந்திஜியின் அகிம்சை வழி போராட்டங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியது. காந்திஜியின் போராட்டங்கள் மிகவும் வித்தியாசமானவை. இந்தியாவில் இருந்துகொண்டே தனது போராட்டங்கள் மூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தை திணறடித்தார்.

காந்திஜியின் போராட்டங்களில் மிக முக்கியமான ஒன்று ஒத்துழையாமை இயக்கம். இதன்படி இந்தியர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எந்த ஒத்துழைப்பும் கொடுக்க கூடாது, வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திற்கு செல்ல கூடாது, இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்த கூடாது, பிரிட்டிஷ்காரர்கள் தயாரித்த துணிகளை உடுத்த கூடாது.

இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்திய வாடிக்கையாளர்களை நம்பி இருந்த இங்கிலாந்து கம்பெனிகள் மூடும் நிலைமைக்கு தள்ளப்பட்டன. இங்கிலாந்து தொழிலாளர்கள் பெரும் வேலையிழப்பை சந்தித்தனர். கிட்டத்தட்ட இங்கிலாந்து பொருளாதாரமே ஆட்டம் கண்டது. இந்தியாவில் இருந்துகொண்டே இங்கிலாந்து பொருளாதாரத்தை ஆட்டம் காண செய்த காந்திஜியின் அறிவுக்கூர்மையை கண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் வியந்து போனது.

தண்டி யாத்திரை:

காந்திஜியின் மற்றொரு முக்கியமான போராட்டம் தண்டி யாத்திரை. 1930-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு இந்தியாவில் உப்புக்கு வரி விதித்தது. என் நாட்டில் உற்பத்தியாகும் பொருளுக்கு பிரிட்டிஷ்காரர்கள் வரி விதிப்பதா என்று கொதித்தெழுந்த காந்தி அதனை எதிர்த்து போராட்டம் ஒன்றை அறிவித்தார். அதன்படி 1930-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி அகமதாபாத்திலிருந்து 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு நடைபயணம் மேற்கொண்டார். மக்கள் கூட்டத்துடன் 23-நாள் பயணத்திற்கு பின்னர் தண்டி சென்றடைந்த காந்தி அங்கேயே கடல் நீரில் உப்பு காய்ச்சி மக்களுக்கு விநியோகம் செய்தார். இதனை தொடர்ந்து இந்தியாவின் பல இடங்களுக்கும் இந்த போராட்டம் பரவியது. காந்திஜி உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆனால் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த ஆங்கிலேய அரசு காந்திஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரியை திரும்ப பெற்றது.

வெள்ளையனே வெளியேறு போராட்டம்:
1942-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து “ஆகஸ்ட் புரட்சி ” என்ற பெயரில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கினார். இதன்படி எங்களை நாங்களே ஆண்டு கொள்கிறோம் அந்நியர்கள் இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று முழங்கினார். காந்திஜியின் மன உறுதியையும் போராட்ட குணத்தையும் கண்ட ஆங்கிலேய அரசு வேறு வழி இன்றி 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு வெளியேறியது.

பாகிஸ்தான் பிரிவினை:
இந்தியா விடுதலை பெற்ற பிறகு முகமது அலி ஜின்னா தலைமையில் ஒரு குழு முஸ்லீம்களுக்கு தனி நாடு கேட்டு போராட்டத்தை தொடங்கியது. அரும்பாடு பட்டு பெற்ற சுதந்திர காற்றை சுவாசிப்பதற்குள் ஏற்பட்ட உள்நாட்டு பிரிவினையால் கலக்கம் அடைந்தார். இறுதியில் இந்தியாவிலிருந்து பிரிந்து பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது.

வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு – V.O.Chidambaram Pillai History in Tamil

இறப்பு:
வாழ்நாள் முழுவதும் அகிம்சையை போதித்த காந்தியின் உயிர் ஒரு துப்பாக்கி குண்டால் பறிபோனது. 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் நாள் தில்லியில் வைத்து நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டு கொல்லப்பட்டார்.

துப்பாக்கிகளும், வாளும், வேலும் சாதிக்க முடியாததை தன் அற வழி போராட்டங்களால் சாதித்து காட்டினார். மன உறுதிக்கும் போராட்ட குணத்திற்கும் இன்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பேசப்படுவது காந்திஜி பற்றித்தான்.

அரசு மரியாதை:
காந்திஜியின் தியாகத்தை கௌரவிக்கும் வகையில் அவர் பிறந்த தினமான அக்டோபர் 2-ஐ காந்தி ஜெயந்தி என்ற பெயரில் அரசு விழாவாக அறிவித்துள்ளது இந்திய அரசாங்கம். இந்திய ரூபாய் நோட்டுகளில் இன்றும் புன்னகைத்துக் கொண்டிருக்கிறார் நம் தேச தந்தை.

Exit mobile version