Tamil Quotes

K. R. Vijaya History in Tamil – கே. ஆர். விஜயா வாழ்க்கை வரலாறு

கே. ஆர். விஜயா அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிப் படங்களில் 400 திரைப்படங்கள் நடித்துள்ளார். இன்றும் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

புன்னகை அரசி என அழைக்கப்படும் நடிகை இவர். தமிழ் சினிமாவில்
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி என்னும் இரண்டு ஜாம்பவான்களுடன் பல படங்கள் நடித்து உள்ளார்.

நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த கே. ஆர். விஜயா அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

1948 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் நாள் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் ராமச்சந்திர ராவ் என்பவருக்கும், மங்களத்திற்கும் கே. ஆர். விஜயா மகளாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் தெய்வநாயகி.

சரோஜாதேவி வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை :

கே. ஆர். விஜயா தந்தை திருவனந்தபுரத்தில் நகை வியாபாரம் செய்து வந்தாா். பின்பு நகை வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்ட்டத்தால். பின்பு தமிழ்நாட்டில் உள்ள பழநி முருகன் கோவிலில் அவரது தந்தை ராமச்சந்திரன் அவர்களுக்கு கோவில் அலுவலராக பணியாற்றும் போது கே.ஆர்.விஜயா குடும்பம் பழநியில் குடியேறியது.

பதினோரு வயதிலிருந்தே நாடகங்களில் நடிப்பதில் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.

திரைப்படத்துறையின் பயணம் :

சில மேடை நாடங்களில் நடித்து வந்த அவா்.1963 ஆம் ஆண்டு கற்பகம் என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அவருடைய முதல் படமே வெற்றியைப் பெற்றுத் தந்ததால்,அவருக்கு அதிக பட வாய்புகள் வந்தன.

திரைக்கு வந்த பிறகு நடிகர் எம். ஆர். ராதா வால் விஜயா என்று அவரது
பெயரை மாற்றி வைத்தாா். இதை தனது தாய்/தந்தையின் முதல் எழுத்தை சோ்த்து கே.ஆா்.விஜயா என்று மாற்றி கொண்டாா். தமிழ்திரையில் அறிமுகம் ஆகினாலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், படங்களிலும் பல உச்ச நட்சத்திர நடிகா்களுடன் ஜோடியாக இணைந்து நடித்துள்ளாா்.

வெறும் பத்து ஆண்டுகளுக்குள் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, தென்னிந்திய ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ எனப் புகழ்பெற்றார். இவர் மடிசார் மாமி, குடும்பம், ராஜ ராஜேஸ்வரி, ஆனந்தம் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

கே.ஆா்.விஜயா, சிவாஜியுடன் நடித்த அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றிச் சித்திரங்களாக அமைந்தது.

தனிப்பட்ட வாழ்க்கை :

இவா் திரைக்கு வந்த சில காலங்களிலே 1966 ஆம் ஆண்டு அன்றைய பிரபல திரைப்பட தயாாிப்பாளரும், தொழிலதிபருமான சுதர்சன் எம். வேலாயுதம் நாயர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டாா் இவா்களுக்கு ஹேமலதா என்கிற ஒரு மகள் உள்ளாா்.

விருதுகள் :

1975 ஆம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார்.

1984 ஆம் ஆண்டு கேரளா அரசாங்கம் விருது வழங்கியது.

சுமார் 30 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்து வரும் கே. ஆர். விஜயா அவர்கள், இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், அவருடைய சிரிப்பு என்னும் மந்திரப் புன்னகையால் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கட்டிப் போட்டுள்ளார்.

Exit mobile version