1958 ஆம் ஆண்டு, பி.ஆர். பந்துலுவின் இயக்கத்தில் வெளிவந்த ‘சபாஷ் மீனா’ திரைப்படத்தில், சிவாஜி கணேசனுடன் இணைந்து அற்புதமான நகைச்சுவை கதாபாத்திரத்தினை ஏற்று நடித்த இவர், அத்திரைப்படத்தில் இன்னொரு கதாநாயகனாகவே நடித்து அனைவரையும் சிரிக்கவைத்தார் என்றுதான் கூறவேண்டும்.
நகைச்சுவை மன்னன் என அழைக்கப்பட்ட சந்திரபாபு அவர்கள், பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் அற்புதக் கலைஞனாகவும் விளங்கியவர்.
இவர் தமிழ் சினிமாவில் குறுகியகாலத்திற்குள் அதிகத் திரைப்படங்களில் நடித்து, வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு பாடகராகவும்
புகழின் உச்சியை அடைந்த சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு :
1927 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 04 ஆம் நாள் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தூத்துக்குடி என்ற இடத்தில் ஜே. பி. ரோட்டரிக்ஸ் மற்றும் ரோசரின் மகனாக ஒரு கிறிஸ்துவக் பிறந்தார் சந்திரபாபு.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :
இவர் குடும்பம் சுதந்திரப்போராட்டக் காலத்தில் ஆங்கில அரசால் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதால் அவர் அங்கயே சிறுது காலம் வாழ்ந்து வந்தார். அங்கேயே அவரின் படிப்பையும் முடித்தார்.
சிறுவயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் கொண்டதால் சினிமா துறைக்கு நுழைய ஆசைபட்டார். அதுமட்டுமல்லாமல், மேல்நாட்டு உடைகள், பாவனைகள், கலச்சாரங்கள் போன்றவற்றின் மீது அலாதியான ஈடுபாடு இருந்தது.
திரைப்படத்துறையில் நுழைய மேற்கொண்ட முயற்சிகள் :
பின் இலங்கையில் இருந்து மீண்டும் சென்னைக்கு வந்தார் இவர், பின் சினிமா துறையில் நுழைய பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் யாரும் இவருக்கு வாய்ப்பு தர முன் வராததால் மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
பின் 1947-ஆம் ஆண்டு அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக அறிமுகம் ஆகி முன்னணி நகைச்சுவை நடிகரானார். 1950-ஆம் ஆண்டுகளில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.
வெற்றி பயணம் :
1952 ஆம் ஆண்டு மோகனசுந்தரம்’ திரைப்படத்தில் இவர், ‘போடா ராஜா பொடி நடையா’ என்ற பாடலைப் பாடி, அனைவரின் கவனத்தையும் இழுத்துக்கொண்டார். பின் 1958 ஆம் ஆண்டு, சிவாஜி கணேசனுடன் இணைந்து அற்புதமான நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார்.
குறுகிய காலத்திற்குள் பல திரைப்படங்களில் நடித்து, நகைச்சுவை நடிப்பில் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் அளவுக்கு திறமையாக இருந்தார்.
தமிழ் திரையுலக ரசிகர்களில், ‘சந்திரபாபு என்னும் கலைஞனை ரசிக்காதவர்கள் எவரும் இல்லை’
கவலை இல்லாத மனிதன் மற்றும் குமாரராஜா போன்ற திரைப்படங்களில கதாநாயகனாகவும் நடித்த இவர், பல படங்கள் தயாரித்ததோடு மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் நடித்திருப்பார்.
தேவாலய திருப்பணி :
சந்திரபாபு கத்தோலிக்க கிறிஸ்தவர் என்பதால் மாதாவின் மீது அதிக பக்தி கொண்டவர். அதனால் கிருஷ்ணகிரியில் ஒரு புதிய தேவாலயம் கட்டுவதற்காகக் கலைநிகழ்ச்சிகள் நடத்தி பெரும் தொகையைத் திரட்டிக்கொடுத்தார்.
அந்தத் தொகையைக் கொண்டே இந்தத் தேவாலயத்திற்கான அஸ்திவாரப்பணிகள் தொடங்கப்பட்டன. இதைக் குறிக்கும் வகையில் தூய
பாத்திமா அன்னை தேவாலயத்தில் சந்திரபாபுவின் பெயரில் கல்வெட்டு ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
சொந்த வாழ்க்கை :
அவருக்குப் பொதுவாகவே தன் நடிப்பின் மீது எப்பொழுதும் ஒரு
கர்வம் உண்டு, ஆகையால் ‘நினைத்ததை செயல்படுத்தியே தீருவேன்’ என்ற பிடிவாத குணம் என்பதால் பலரால் திமிர் பிடித்தவன் என்று புரிந்துகொள்ளப்பட்டார். இதனால் படம் எடுத்து அழிந்து போனார்.
1960 -ஆம் ஆண்டுகளில் நாகேஷ் பின்னர் சோ ஆகியோர் நகைச்சுவை நடிகர்களாக முன்னேறத் தொடங்கியதும் இவர் கிழே விழ தொடங்கினார். பின் போதைக்கும் அடிமையாகி இருந்தார்.
இறப்பு :
சந்திரபாபுவின் இறுதிக்காலத்தில் சோகம் அதிகமாக அதிகமாக, மதுபழக்கமும் அதிகரித்தது. இதனால் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் 1975-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பிள்ளைச் செல்வம்’ (1974) என்னும் திரைப்படமே இவரது கடைசிப் படமாகும். அது வெளிவருவதற்கு முன்பாகவே 1974-ஆம் ஆண்டு இவர் மரணமடைந்தார்.