Tamil Quotes

இந்திய குடியரசு தினம்

republic day

President Barack Obama and First Lady Michelle Obama view the Republic Day Parade with President Pranab Mukherjee and Prime Minister Narendra Modi from the Rajpath saluting base in New Delhi, India, Jan. 26, 2015. (Official White House Photo by Pete Souza)

ஆகஸ்ட் 15-ஆம் நாள் ஆண்டுதோறும் சுதந்திர தினம் கொண்டாடுவதற்கான காரணம் நம் அனைவருக்கும் தெரியும். ஆங்கிலேயர்களிடம் இருந்து 200  வருட போராட்டத்திற்கு பிறகு, பல உயிர் தியாகங்களை செய்து நம் முன்னோர்கள் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட்  15-ஆம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கினர். அதன் நினைவாக சுதந்திர தினம் கொண்டப்படுகிறது.

ஆனால் ஜனவரி 26-ஆம் நாள் ஆண்டு தோறும் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அந்த காரணத்தை இன்று தெரிந்து கொள்வோம்.

குடியரசு தினம் என்பதன் பொருள் :

“இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறி, இந்தியா மக்களாட்சி தத்துவத்தை ஏற்று கொண்ட ஒரு நாடாக அமைந்ததை கொண்டாடும் நாள் தான் குடியரசு  தினம். குடியரசு என்பதற்கு மக்களாட்சி என்று பொருள்”.

பூர்ண சுவராஜ் :

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு, 1930-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா முழுவதும் சுதந்திரத்திற்க்காக போராட்டங்கள் நடத்தி, பாடுபட்டு கொண்டிருந்த பல இயக்கங்கள் காந்தியடிகளின் கீழ் ஒன்று கூடி, ஒரு மாநாட்டை நடத்தினர். அந்த மாநாட்டில் ‘பூர்ண சுவராஜ்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

‘பூர்ண சுவராஜ்’ என்பதற்கு அர்த்தம் முழுமையான சுதந்திரம் என்பதாகும். அதனை நினைவு கூறும் வகையில் காந்தி அடிகள் இனி ஆண்டு தோறும் ஜனவரி 26-ஆம் நாளை சுதந்திர தினமாக கொண்டாடி ஆங்கிலேயர்களுக்கு தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைப்புகளுக்கு உத்தரவிட்டார்.

இந்தியா ஆங்கிலேர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு, ஜனவரி 26-ஆம் நாள் தான் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வந்தது.

இந்திய அரசியலமைப்பு :

1947-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து முறையான சுதந்திரத்தை பெற்ற பிறகு, டாக்டர் அம்பேத்கர் தலைமையில், இந்தியாவிற்கான அரசியல் அமைப்பை உருவாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

அடுத்த 80 நாட்களில் கடும் உழைப்பை செலுத்தி, இந்தியாவிற்கான அரசியல் அமைப்பை உருவாக்கி அதே ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி அம்பேத்கர் ஒப்படைத்தார்.

 அந்த அரசியல் அமைப்பு பிறகு பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளபட்டால் தான் அதிகார பூர்வ சட்டமாக மாறும்.

இந்தியாவின் முதல் பாராளுமன்றம் :

நேரு தலைமையில் அமைந்த முதல் பாராளுமன்ற அமைச்சரவை கிட்டத்தட்ட 2 வருடங்கள் விவாதம் நடத்தி பிறகு ஒருவழியாக 1950, ஜனவரி 24-ஆம் நாள் திருத்தப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

அதன் பிறகு அப்போது இருந்த 308 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கையால் எழுதப்பட்ட அரசியல் அமைப்பு சட்ட புத்தகம் சட்ட வலிமை பெற்றது.

இதனை மக்களாட்சி மலர்ந்த நாளாக கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்த நேரு அரசு, காந்தியடிகள் சுதந்திர தினமாக அறிவித்த ஜனவரி 26-ஆம் நாளை மக்களாட்சி மலர்ந்த நாள் அதாவது குடியரசு தினமாக அறிவித்தது. மேலும் குடியரசு தினத்தை கொண்டாடுவதற்கு என்ற சில வரைமுறைகளையும் விதித்தது.

வரைமுறைகள் :

குடியரசு தினத்தன்று இந்திய பிரதமர் தில்லியில் உள்ள இந்தியா கேட் நினைவிடத்திற்கு சென்று சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்காக அஞ்சலி செலுத்த வேண்டும்.

ஆண்டுதோறும் ஏதாவது ஒரு சிறப்பு விருந்தினருக்கு அழைப்பு விடுத்து அவரை குடியரசு தின விழாவில் பங்குகொள்ள செய்யவேண்டும். 1950-ஆம் ஆண்டு நடந்த முதல் குடியரசு தின விழாவில் இந்தோனேசிய நாட்டின் அதிபர் சுகர்ணோ என்பவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பிறகு சிறப்பு விருந்தினருடன் சேர்ந்து  முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு, அந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட பாதுகாப்பு வீரர்களுக்கு பதக்கங்களை கொடுத்து ஊக்குவிக்க வேண்டும்.

அதே போல் மாநிலங்களில் அந்தந்த மாநில முதல்வர்கள், தலைமை செயலகத்தில் தேசிய கொடியை ஏற்றி, காவலர் அணிவகுப்பை பார்வையிட வேண்டும். மேலும் அந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும்.

அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில், தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் கொடியேற்றி இனிப்பு கொடுத்து கொண்டாட வேண்டும். 1950-ஆம் ஆண்டு நேரு பிறப்பித்த ஆணையில் மாநில ஆளுநர்கள் தான் தேசிய கொடியேற்றி அணிவகுப்பிற்கு தலைமை தாங்க வேண்டும் என்று சொல்லி இருந்தது.

அதன் பிறகு தமிழக முதலமைச்சராக வந்த கலைஞர் கருணநிதி, அப்போது பிரதமராக இருந்த நேருவின் மகள் இந்திரா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் இருக்கும் போது, ஆளுநர் எப்படி கொடியேற்றலாம்.

இனி சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் மாநிலங்களில் கொடியேற்றும் உரிமையை  அந்தந்த மாநில முதல்வர்களுக்கு வழங்க கோரினார். அதன் அடிப்படையில் தான் இந்தியா முழுவதும் இப்போது முதலைச்சர்கள் கொடியேற்றுகிறார்கள்.

இந்த கட்டுரையை கீழ்கண்டவாறு இணையத்தில் தேடலாம் :

குடியரசு தினம் என்றால் என்ன, குடியரசு தினம் சிறப்பு கட்டுரை, குடியரசு தினம் மலர்ந்த வரலாறு, குடியரசு நாள், குடியரசு தின வரலாறு, குடியரசு விளக்கம், republic day speech in tamil essay, tamil kudiyarasu dhinam katturai, republic day tamil speech download, kudiyarasu dhinam date and year

Exit mobile version