Tamil Quotes

சுதந்திர தினம் – இந்திய விடுதலை திருநாள்

independence day speech tamil

இந்திய சுதந்திர தினம் ( Independence Day ) சிறப்பு கட்டுரை

200 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த மண்ணிலேயே அடிமையாக வாழ்ந்த ஒவ்வொரு இந்தியனும் சுதந்திர காற்றை சுவாசித்த நாள் ஆகஸ்ட் 15, 1947. ஆயிரம் ஆயிரம் போராட்டங்கள், லட்சக்கணக்கனாக உயிர்களை விலையாக கொடுத்து வாங்கப்பட்டது இந்த சுதந்திரம், இதன் நோக்கத்தையும், புனிதத்தையும்  சரியாக பயன்படுத்துவது இந்தியராகிய நம் ஒவ்வொருவரின் முதல் கடமை Independence Day Speech Tamil.

தொடக்க கால இந்தியா:

இந்திய நாட்டின் எல்லை வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறாக இருந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியா, தற்போதைய இந்தியாவுடன் சேர்த்து பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தை உள்ளடக்கியதாக இருந்தது. 

அதற்கு முன் மன்னராட்சி காலத்தில் தென்னிந்தியாவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் சிறப்பாக ஆட்சி செய்தனர். இது தவிர விஜயநகர பேரரசு, மராட்டிய பேரரசு, சீக்கிய பேரரசு, முகலாய பேரரசு போன்ற குறிப்பிடத்தக்க சில பேரரசுகளும் வெவ்வேறு கால கட்டங்களில் இந்தியாவை ஆண்டுள்ளனர்.

அந்நிய நாட்டினரின் வருகை:

வாணிபம் செய்யும் நோக்கத்தில் முதன் முதலில் இந்தியாவுக்கு கடல் வழியாக வந்தவர் போர்ச்சுகீசிய நாட்டை சார்ந்த வாஸ்கோடகாமா.இவரை பின் தொடர்ந்து ஐரோப்பியர்கள், டச்சு காரர்கள், ஆங்கிலேயர்கள், போன்றோர் வணிகம் செய்யும் நோக்கத்தில் இந்தியாவின் பல கடலோர பகுதிகளில் தடம் பதித்தனர்.

ஐரோப்பியர்கள் ஆரம்ப காலத்தில் வாணிபம் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் நுழைந்தாலும் மெல்ல மெல்ல இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் இறங்கினர். இந்தியாவின் பல பகுதியின் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றிய போதிலும், அனைத்தையும் ஒரே நூற்றாண்டில் ஆங்கிலேயர்களிடம் பறிகொடுத்தனர்.

பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சி:

ஆங்கிலேயர்கள் ஐரோப்பியர்களை சூழ்ச்சியால் வீழ்த்திய பின்னர் அப்போதைய முகலாய பேரரசர் ஜஹாங்கிர் அனுமதியுடன் கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் அமைத்தனர். வரி செலுத்தாமல் வாணிபம் செய்த ஆங்கிலேயர்களை வங்கதேச நவாப் “சிராஜ் உட துலாத்” என்பவர் எதிர்த்ததால் அவரை வீழ்த்த 1757-இல் ஆங்கிலேயர்கள் “பிளாசி யுத்தத்தை” தொடங்கினர்.

இதில் வங்கதேச நவாப் தோல்வியுற்றதால், இந்தியாவை ஆண்ட முகலாய பேரரசரிடம் அனுமதி பெற்று வங்கதேசத்தை ஆங்கிலேயர்கள் ஆண்டனர்.இதுவே பிற்காலத்தில் இந்தியா முழுவதையும் ஆங்கிலேயர்கள் ஆள்வதற்கு அடித்தளமாக அமைந்தது.

பின்னர் இந்தியர்கள் மீது ஆங்கிலேயர்கள் விதித்த வரிகள், நிலங்களை கையகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளால் இந்தியா பெரும் பஞ்சத்துக்கு தள்ளப்பட்டது. கிரேட் பாமின் ஆஃப் 1876–78’ மற்றும்  ‘இந்தியன் பாமின் ஆப் 1899–1900ல்’ ஆகிய பஞ்சங்களால் 2-கோடிக்கும் மேற்பட்ட மக்கள் செத்து மடிந்தனர்.

கிழக்கிந்திய கம்பெனியால் இந்தியாவின் வளங்கள் சுரண்டப்பட்டு நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட்டதை கண்டு கொதித்தெழுந்த இளைஞர்கள் பலர் சேர்ந்து “1857 இந்திய கலகம்” என்ற இயக்கத்தினை உருவாக்கினர். இதுவே “முதல் இந்திய போர்” என்று அழைக்கப்பட்டது. ஒரு வருட போராட்டத்திற்கு பின்னர் இந்த இயக்கத்தை ஒடுக்கி அதன் தளபதியை நாடு கடத்தி முகலாய வம்சத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர் ஆங்கிலேயர்கள்.

இந்த கட்டுரையை கீழ்கண்டவாறு இணையத்தில் தேடலாம் :

சுதந்திர தினம் கட்டுரை, சுதந்திர தினம் பேச்சு போட்டி, விடுதலை நாள், சுதந்திர தின பேச்சுப் போட்டி கட்டுரை, இந்திய சுதந்திர தினம் பேச்சு, சுதந்திர தினம் என்றால் என்ன, suthanthiram essay in tamil, independence day speech in tamil essay, suthanthira thinam katturai in tamil, sudhandhira dhinam katturai tamil, independence day katturai in tamil, suthanthira india in tamil speech, sudhandhira dhinam patri katturai, viduthalai thirunal katturai in tamil, suthanthira india essay in tamil, independence day speech in tamil essay.

ஆங்கிலேயர்களின் ஆட்சி:

முதல் இந்திய போரில் வெற்றி பெற்றதை தொடர்ந்து நேரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முனைப்புடன் செயல்பட தொடங்கினர் ஆங்கிலேயர்கள்.ஒரு புறம் ஆங்கிலேயர்களின் கை ஓங்கிக்கொண்டே சென்ற போதிலும், இந்தியர்களும் தொடர்ந்து பல போராட்டங்களிலும் கிளர்ச்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

1905-இல் அப்போதைய வங்கதேசத்தின் வைஸ்ராயும் கவர்னருமான கர்சன் என்பவர் இந்தியர்களை பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டார். அப்போது ஏற்பட்ட வங்காள பிரிவினையை கண்டு கொதித்தெழுந்த இந்தியர்கள் பலர் சுதேசி மற்றும் புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். பால கங்காதர திலகர் தேசியவாதியாக இருந்து சுயராஜ்யத்தை ஏற்றுக்கொண்டார். இதனால் ஏற்பட்ட குழப்பத்தால் 1907-இல் அகில இந்திய காங்கிரஸ் அடிப்படைவாதம் தேசியவாதம் என இரண்டாக பிளந்தது. 

நாடு முழுவதும் தொடர்ச்சியாக ஏற்பட்ட போராட்டங்களை தடுக்க எண்ணிய ஆங்கிலேயர்கள் 1908-ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் மற்றும் வ.உ.சி -யை கைது செய்து சிறையில் அடைத்தனர். வங்காள பிரிவினையால் ஏற்பட்ட தொடர் போராட்டங்களை தணிக்க 1911-ஆம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் டார்பாரில் என்பவரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர், வங்க பிரிவினையை திரும்ப பெறுவதாக அறிவித்தார். 

முதல் உலக போர்:

உலக நாடுகள் பலவற்றுக்கிடையே நிலவிய மோதல்கள் காரணமாக 1914-ல் முதல் உலக போர் மூண்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்ததால் இந்தியாவும் போரில் பங்கேற்கவேண்டியதாயிற்று.

முதல் உலக போரின் விளைவுகளாக உயர் உயிரிழப்பு விகிதம், பணவீக்க உயர்வு, கட்டுப்படுத்த முடியாத நோய் தொற்று, வர்த்தக பாதிப்பு போன்றவை இந்திய மக்களுக்கு பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தியது. இதனால் ஆங்கிலேய ஆட்சியை தூக்கி எரிய இந்திய மக்கள் வீறுகொண்டெழுந்தனர். அந்த நேரத்தில் தென்னாபிரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்தின் தலைவராக இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்திய திரும்பினார்.

இந்திய மக்களின் கடும் எதிர்ப்பை கையாள “ரௌலட் சட்டம்” என்ற ஒரு மோசமான சட்டத்தை ஆங்கிலேயர்கள் அமல் படுத்தினர். இதன் படி பத்திரிகைகளை மூடுதல், விசாரணை ஏதும் இன்றி அரசியல் செயல்பாடுகளை ஒடுக்குதல், கைதனை இல்லாமல் ராஜதுரோகத்தில் ஈடுபடுவதாக கருதப்படும் யாரையும் கைது செய்யலாம். 1919-ல் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை பிரிந்து கிடந்த காங்கிரஸ் கட்சி, கிளர்ச்சியாளர்கள், போராட்டக்காரர்கள் என அனைவரையும் ஒன்று சேர்த்தது.

ஒருபுறம் மகாத்மா காந்தி தலைமையில் அகிம்சை வழி போராட்டங்களும், மற்றொருபுறம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் போன்றவர்களின் தலைமையில் ஆயுத போராட்டங்களும் தொடர்ந்தவண்ணம் இருந்தன.

சுதந்திர இந்தியா :

இந்தியர்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக இந்தியாவை விட்டு வெளியேற ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர். 1947-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனெரல் விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன் ஜூன் 3-ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவை “மதசார்பற்ற இந்தியா” என்றும் “முஸ்லீம் பாகிஸ்தான்” என்றும் பிரித்து தன்னாட்சி அதிகாரம் அளிப்பதாக அறிவித்தார். இந்த பிரிவினையால் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-இல் பாகிஸ்தான் தனி நாடாகவும், ஆகஸ்ட் 15-இல் இந்தியா தனி நாடாகவும் சுதந்திர தேசமாக உருவெடுத்தன.

இந்திய பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணை பிரதமராக சர்தார் வல்லபாய் படேலும் பொறுப்பேற்றனர். அவர்கள், அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி கவர்னராக இருந்த மவுண்ட்பேட்டனை சிறிது காலம் அதே பதவியில் தொடரும்படி கேட்டுக்கொண்டனர். அதன்படி 1948-வரை மவுண்ட்பேட்டன் இந்தியாவின்  கவர்னராக பதவி வகித்தார். 1948, ஜூனில் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சரி அந்த பதவியில் அமர்த்தப்பட்டார்.

சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் – Independence Day Speech Tamil:

ஆங்கிலேயர்களிடமிருந்து போராடி பெற்ற சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் நாள் நாடு முழுவதும் “சுதந்திர தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கிய பின்னர் விடுமுறை அளிக்கப்படும்.

அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகங்களில் மாவட்ட ஆட்சி தலைவர் கொடி ஏற்றி காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். மாநில முதல்வர்கள் மாநில தலைநகரங்களிலும், பிரதமர் டெல்லி-யிலும் தேசிய கொடி ஏற்றி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றுவார்.

விழாவில் நாட்டின் பாதுகாப்பை பறைசாற்றும் விதமாக முப்படை அணிவகுப்பு நடைபெறும். இதனை தொடர்ந்து, ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.

சாதி, மதம், இனம் கடந்து இந்தியர் அனைவரும் கொண்டாடும் விழாவாக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் சுதந்திரத்தை போற்றுவோம்……

Exit mobile version