fbpx

Gautama Buddha History in Tamil – கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு

ஒரு பணக்கார அரசகுடும்பத்தில் பிறந்து அனைத்து விதமான வசதிகளையும் அனுபவித்து இந்த ராஜ வாழ்க்கை வேண்டாம் என்று உதறி வாழ்வின் அடிப்படை நோக்கத்தினை தெரிந்து கொள்ள துறவு சென்றவர் தான் புத்தர்.

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்ற இவர் கூறிய வாக்கியம் இன்றுவரை பொன்மொழியாக கருதப்படுகிறது. இன்றைய தொழில்நுட்ப
வாழ்க்கையில் மனநிம்மதியை தேடுபவர்களுக்கு புத்தரின் வாழக்கை தகல்வல்கள் விளக்கத்தினை கொடுக்கும்.

எதிர்கால கர்மாவினை அதிகரிக்காமல் தடுத்து, நல்ல கர்மங்களை
அதிகரித்து, மனதைத் தூய்மைப்படுத்தி, ஞானத்தை அடையும் பௌத்த போதனைகளை வகுத்த கௌதம புத்தரின் போதனைகளனைத்தும் ‘உள்ளார்ந்த சுயநிலையை உணர்ந்து இறுதியில் பேரின்பத்தை அடைவதையே’ உணர்த்துகிறது. இவரின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

தற்போது இந்தியாவின் அண்டை நாடாக உள்ள நேபாளத்தில் “லும்பினி” எனும் நகரில் கபிலவஸ்து பேரரசரான சுத்தோதனா கௌதமா என்ற அரசருக்கும், மகாமாயா என்ற தம்பதிக்கும் கி.மு. 563 ஆம் ஆண்டு மகனாக பிறந்தார் என்று புத்தரை பற்றிய ஆராய்ச்சி குறிப்புகள் அவரை பற்றி தெரிவிக்கின்றன.

புத்தருக்கு அவர்களது பெற்றோர் இட்ட பெயர் சித்தார்த்தர் . அவர் பிறந்து, ஏழு நாட்கள் கழித்து அவரது தாயார் இறந்ததால், அவர் மகாப்ரஜாபதி என்ற அவரது சகோதரியால் வளர்க்கப்பட்டார்.

ஜெமினி கணேசன் வாழ்க்கை வரலாறு

ஆரம்பகால வாழ்க்கை :

புத்தரின் எதிர்கால வாழக்கையில் அவர் பெரிய மகானாக மாறிவிடுவார் என்று ஞானி ஒருவர் குறிப்பிட்டமையால் அவரது தந்தை சுத்தோதனா கௌதமா புத்தரை வெளியுலக கஷ்டம், அழுத்தம் மற்றும் உழைப்பு போன்றவைகளை அவருக்கு ஏற்படுத்தாமல் அரண்மனைக்குள்ளே சகலவிதமான வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்தார். இதனால் தனது இளமைப் பருவம் முழுவதும் அரண்மனையிலே செலவிட்டார்.

இல்லற வாழ்க்கை :

எங்கு தனது மகன் உலக இன்பங்களைத் துறந்து, துறவறம் பூண்டுவிடுவான்’ என்று அஞ்சிய அரசர் சுத்தோதனர்,புத்தரின் 16ஆம் வயதில் அவருக்கு யசோதரா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார்.

அவர்களுக்கு ராகுலா என்ற ஒரு மகனும் பிறந்தான். அவர் வாழ்ந்து வந்த ஆடம்பர, அரச வாழ்வின் மீது பற்றற்றவராக இருந்தார், சித்தார்த்தர்.

துறவறம் மீது பற்று :

புத்தர் பிறந்ததிலிருந்து அவருக்கு தேவைப்பட்ட அனைத்து விடயங்களும் அவருக்கு மிக எளிதாக கிடைத்தமையால் அரண்மனை வாழ்க்கையும், இல்லற வாழ்க்கையும் வெறுத்துப் போனதால், உலகின் தனது இருத்தலுக்கானப் பொருளை அறிய வேண்டி, ஒரு நாள் யாருக்கும் தெரியாமல், தனது தந்தையின் கட்டளைக்கு எதிராக அரண்மனையை விட்டு வெளியே சென்றார்.

அவ்வாறு அவர் வெளியே அவர் சென்று கொண்டிருக்கும் போது சில நிகழுவுகளை அவர் கவனித்தார். இவை அனைத்தும் அழகு மற்றும் வாழ்க்கை நிரந்தரமானது அல்ல என்றும் அவருக்கு புரிய வைத்தது. உலகில் ஏதும் நிரந்தரமில்லை ஆனால் அமைதி வேண்டும் என அவர் நினைத்தார். இதனால் துறவற வாழ்க்கை மேற்கொள்ள வேண்டுமென்ற
முடிவுக்கு வந்தார்.

துறவறப் பயணம் :

அவர் ராஜ்யத்திற்கு அருகே அமைந்துள்ள மலைகளில், துறவிகள் வாழும் குகைகளை நோக்கிச் சென்றார். அங்கு அவர், அலாமா கலாமோ என்ற துறவியிடம், தனக்கு வழிகாட்ட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். பின் சிறிது காலம் கழித்து ஆன்மீகப் பின்தொடர்தலுக்காக மற்றொரு துறவியிடம் செல்ல முடிவு எடுத்தார்.

பின் யோகா மற்றும் சந்நியாசத்தின் பயிற்சி செய்வதில் உறுதியாக இருந்தார். இதனால் அவரால் உணவு எடுத்து கொள்ள முடியவில்லை. அவர் மிகவும் பலவீனமானார். ஒரு நாள் தியானம் செய்யும் போது சில நடனமாடும்
பெண்கள் பாடிய பாடல் சித்தார்த்தருக்கு கேட்டது.

இதனால் உண்மையான மகிழ்ச்சி அடைவதற்கு, உணவு உண்ணாமலிருப்பது போன்ற சுய சித்திரவதைகள் உதவப் போவது இல்லை என்று அவருக்குப் புரியவைத்தது. இதனால் அனைத்தையும் கைவிட்டு மீண்டும் சாப்பிடத் தொடங்கினார். அவர் உடலும், மனமும் அமைதியாக இருந்தால் மட்டுமே அமைதியை அடைய முடியும் என்றும் உணர்ந்தார்.

புத்தருக்கு ஞானம் கிடைத்த போதி மரம் :

கடும் தவம் புரிந்தால் ஞானம் கிடைக்காது நாம் இறக்கவே நேரிடும் என்பதனை உணர்ந்த புத்தர். ஞானம் கிடைக்க சிறந்த வழி தியானம் தான் என்று தியானத்தில் தனது கவனத்தினை திருப்பினார். பிறகு பலமயில்கள் நடந்து சென்று பல்வேறு இடங்களில் தியானத்தினை தொடர்ந்த்து செய்து வந்தார். அவ்வாறு அவர் பிஹார் மாநிலத்தில் உள்ள “கயை” என்னுமிடத்தில்
போதி மரத்தின் அடியில் பலநாட்கள் தியானம் செய்தார்.

முழு ஒளியூட்டத்தை அடைவதற்காக, தனது உயிரையே இழக்கத் தயாராக இருந்து, ஞானம் ஒன்றையே தனது குறிக்கோளாகக் கொண்டிருந்த கௌதமருக்கு, உலக மாயைகள் பல்வேறு விதமான இடையூறுகளும், தொந்தரவுகளும் கொடுத்தன.

இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல், 49 நாட்கள் தொடர்ந்து
தியானத்தில் இருந்த அவருக்கு தேடுதலுக்கான பதில் கிடைத்தது. அவ்வாறு அவர் தியானத்தில் அமர்ந்திருந்த போது முதன் முறையாக தான் மகிழ்ச்சையாக இருப்பதாக வந்தார்.

மேலும் தனக்கு ஞானம் கிடைத்ததையும் அவர் உணர்ந்தார். “ஆசையே துன்பத்திற்கு காரணம்” என்பதனும் அறிந்துகொண்டார். இதனால் எண்ணற்ற சீடர்கள் அவரின் போதனைகளை ஆதரித்து, பின் தொடர்ந்தனர். இவரது போதனைகளுக்கு, இந்துக்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

புத்தரால் தோன்றிய புத்தமதம் :

தொடர்ந்து தான் அறிந்த ஞானத்தினை மக்களுக்கு போதித்து அவர்களது வாழ்க்கையில் படும் துயர் மற்றும் கவலையினை கலைக்க நினைத்தார் . மக்களிடம் சென்று அவர்களுக்கு நல்வாழ்விற்கான தனது போதனைகளை அவர் போதித்தார்.

இவரது போதனையால் ஈர்க்கப்பட்ட மக்கள் ஒரு சமூகத்தை கூடி அதற்கு புத்தமதம் என்று பெயர் வைத்து அவரின் கொள்கைவழி வாழ்க்கை நடைமுறையினை அமைக்கவேண்டும் என்று நினைத்தனர்.

அவரது போதனைகள் அனைத்தும் இந்து மதத்தின் சாதி முறைக்கு எதிராகவும், ஏழைகள், பணக்காரர்கள் என்ற பிரிவினை இல்லாமல் இருந்ததால், வெகுவாகப் பல்வேறு தரப்பட்ட மக்களை ஈர்த்தது. இந்த புத்தமதம் இன்று வரை புத்தமதத்தினை உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

இறப்பு :

கி.மு.483ஆம் ஆண்டு புத்தர் அவர்கள், தனது சீடர் ஒருவரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு உணவு உண்ணச் சென்றார். உணவில் அவரது சீடர் கலந்த விஷத்தால். அவர் நோய்வாய்ப்பட்டார். இதையடுத்து சில நாட்களுக்கு பிறகு, அவர் இயற்கை எய்தினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.