Tamil Quotes

ராஜீவ் தாய்லாந்து கொய்யா வெற்றி கதை – Gajiv Gova Fruit Success Story In Tamil

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்று அனைவருக்கும் தெரியும். சினிமா பார்ப்பவர்கள் எல்லாம் சினிமாவில் நடிக்க ஆசைப்படுவார்கள். ஆனால் விவசாயத்தை பற்றி பேசும் நாம் விவசாயம் செய்ய ஆசைப்படுவதில்லை.

பெரும்பாலும் இந்தியாவில் விவசாயம் படிக்காத நபர்கள் மட்டுமே செய்வார்கள் பின் அவர்கள் விவசாயத்தில் நஷ்டம் அடைந்து தற்கொலை செய்து கொள்வார்கள்.

ஆனால் இப்போது இளம் தலைமுறை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத்தை செய்கிறார்கள். இந்த செயல் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவது மட்டுமின்றி லட்சக்கணக்கான கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி அவர் பணிபுரிந்த வேலையை உதறிவிட்டு விவசாயம் செய்ய தொடங்கியுள்ளார். இன்று அவர் விவசாயத்தின் முலம் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

விவசாயம் செய்ய ஆர்வம் :

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜீவ் பிஎஸ்சி விவசாயம் படித்துவிட்டு பின் வேலைக்கு போக தொடங்கினார் ஆரம்பத்தில் ராஜீவ்வுக்கு விவசாயத்தை ஒரு தொழிலாக செய்ய எண்ணம் இல்லை. அவர் அனைவரும் போல வேலைக்கு சென்றார்.

அவர் சிறு தொழிலாக விதைகள் மற்றும் செடிகளை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டினார், பின் தான் அவருக்கு விவசாயத்தில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. இறுதியில், அவர் விவசாயத்தை தொழிலாக மாற்ற விரும்பினார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ வெற்றி பயணம்

தாய்லாந்து கொய்யா :

பின் விதைகளை பற்றி படிக்க ஆரம்பித்தார் அப்போது தாய்லாந்து வகை கொய்யாவைப் பற்றி ராஜீவ் அறிந்து கொண்டார். பின்பு அவருக்கு விவசாயம் கற்று தந்த விவசாயிகளுடனும் உரையாடி விவசாயத்தை முழுமையாக கற்றுக்கொண்டார்.

ராஜீவ் 2017ஆம் ஆண்டு வேலையை உதறிவிட்டு ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலாவில் 5 ஏக்கர் நிலத்தில் தாய்லாந்து கொய்யாவை பயிர் செய்தார்.

வெற்றிக்கு காரணம் :

30 வயதான ராஜீவின் விவசாயம் 5 ஏக்கரில் ஆரம்பம் செய்து இன்று 25 ஏக்கர் நிலமாக உருவாக்கியுள்ளார். இவர் சுமார் 12,000 மரங்களை வளர்த்து அதில் ஒரு ஏக்கர் நிலத்துக்கு 6 லட்சம் ரூபாய் சம்பாரித்தும் வருகிறார்.

ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பாரித்து வருவதாக சொல்கிறார். தனது வெற்றி குறித்து ராஜீவ் கூறுகையில், விவசாயம் செய்ய நினைத்தபோது
வேலையை விட பயந்ததாகவும்.

அந்த நேரத்தில் தாய்லாந்து கொய்யா விவசாயி பஞ்ச்குலாவில் உள்ள இவரின் 5 ஏக்கர் கொய்யாத் தோட்டத்தை பாதுக்காக்க முடியாமல் கஷ்ட பட்டதாகவும்
சொன்னார். அதை நான் பயன்படுத்தி கொண்டேன்.

இந்த தாய்லாந்து கொய்யா மரம் காய்களை ஆண்டுக்கு இரண்டு முறை அறுவடை செய்யலாமாம்.

மழைக்காலத்தில் ஒருமுறை, குளிர்காலத்தில் மீண்டும் ஒருமுறை. ஆனால் ராஜீவ் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அறுவடை செய்கிறார் அதுவும் மழைக்காலத்தில் மட்டுமே அறுவடை செய்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் நம்மை போல மரங்களும் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்.

வருமானம் :

இவர் மற்றவர்களை விட டெல்லி மார்க்கெட்டில் 10 கிலோ எடையுள்ள பெட்டிகளில் சீசன் மற்றும் தரத்தை பொறுத்து ரூ.400 முதல் ரூ.1000 வரை விலை நிர்ணையம் செய்கிறார்.


ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ.6 லட்சம் வருமானமும் மொத்தத்தில் ஒரு கோடியும் இவருக்கு வருகிறது.

Exit mobile version