fbpx

Bharathidasan History in Tamil – பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு

பாரதிதாசன் அவர்கள் பிரெஞ்சு மொழியில் ஆரம்பகால பள்ளிப்படிப்பினை மேற்கொண்டாலும் அவர் தமிழ் மொழி மீது கொண்ட ஈடுபாடு காரணமாக தமிழ் மொழியினை கற்க ஆரம்பித்து 16 வயதிலேயே தமிழ் மொழியில் புலமை அடைந்தார்.

பாரதிதாசன் அவரகள் தமிழ் இலக்கிய வார்த்தை மொழிகளின் சொந்தக்காரரான பாரதியார் மீது மீது கொண்ட ஈர்ப்பினால் அவரது பெயரினை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்.

தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தமிழகத்தின் அருகில் உள்ள பாண்டிச்சேரி என்கிற புதுவையில் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி 1891ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர்களின் பெயர் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மையார் என்கிற தம்பதிக்கு மகனாய் பிறந்தார்.

இவருடைய இயற்பெயர் “சுப்புரத்தினம்” இவர் தனது தந்தையின் மீது கொண்ட
அளவு கொண்ட பாசத்தினால் அவரது பெயரின் முதற் பாதியில் கனகசபை என்கிற அவரது அப்பாவின் பெயரினை சேர்த்து கனக சுப்புரத்தினம் என்று சேர்த்துக்கொண்டார்.

ஜெயகாந்தன் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும் :

பாரதிதாசன் அவர்களின் தந்தையான கனகசுப்புரத்தினம் அவர்கள் புதுவையில் ஒரு மிக பெரிய செல்வந்தராக வலம் வந்தார். அந்த சமயத்தில் ஆங்கிலேயர் ஆதிக்கம் புதுவையில் இருந்ததால் அவர் பிரெஞ்சு பள்ளியில் தனது ஆரம்ப படிப்பை தொடங்கினார்.

இருப்பினும் அவருக்கு தமிழ் மொழியின் மீது இருந்த அன்பின் காரணமாக தமிழ் மொழியினை முறையாக கற்க ஆரம்பித்தார். சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார். பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது 16-வது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார்.

தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே
முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். பிறகு அவர் காரைக்காலில் உள்ள அரசு கல்லூரியில் தமிழ் ஆசிரியராக பணியாற்ற துவங்கினார்.

இல்லற வாழ்க்கை :

பாரதிதாசன் அவர்கள் தனது 29 ஆம் வயதில் 1920 ஆம் ஆண்டு பழநி அம்மையாரை மணந்தார். பிறகு இவர்கள் இருவருக்கும் 8 ஆண்டுகள் கழித்து 1928ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார். அதன் பிறகு சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.

பாரதியார் மீது பற்று :

தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். ஒருமுறை பாரதிதாசன் அவர்கள் அவருடைய நண்பரின் திருமண விழாவிற்கு சென்றிருந்த போது ஒரு பாடலை பாடினார்.

அந்த விழாவிற்கு பாரதியாரும் வந்திருந்தார் அந்த பாடலே பாரதிதாசனை பாரதியாருக்கு அறிமுகம் செய்ய வைத்தது. அந்த பாடல் பாரதியாருக்கு மிகவும் பிடித்து போக அந்த பாடலை தனது சுதேசமித்திரன் இதழில் அவர் வெளியிட்டார்.

தொழில் மற்றும் அரசியல் வாழ்க்கை :

பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். தமிழ் மொழிக்காக தனது தொண்டினை ஆற்றிய அவர் அரசியலிலும் தனது தொண்டினை ஆற்ற தவறவில்லை. ஆம் பாரதிதாசன் அவர்கள் 1954ஆம் ஆண்டு புதுவை சட்டமன்ற தேர்தலில் நின்று தனது முதல் தேர்தலிலேயே சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

பிறகு 1960ஆம் ஆண்டு மீண்டும் தேர்தலில் நின்று அவர் தோல்வியை தழுவினார். பெரியாரின் கொள்கைகளில் ஆர்வம் நிறைந்த அவர் தனது பாடல்கள் மூலம்
கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு மற்றும் மத எதிர்ப்பு போன்ற பெரியாரின் கொள்கைகளை தழுவி தனது பங்கினை அவரது பாடல்கள் மூலம் வழங்கினார்.

அவரது படைப்புகள் :

பாரதிதாசன் மொத்தம் 86 நூல்களை எழுதியுள்ளார் மற்றும் பல்வேறு திரைப்பட வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார் இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார்.

அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில. பாண்டியன் பரிசு, இருண்ட வீடு,
அழகின் சிரிப்பு, குடும்பவிளக்கு, இசைஅமுது, எதிர்பாராத முத்தம், குறிஞ்சித்திட்டு, முல்லைக்காடு, விடுதலை வேட்கை.

இறப்பு :

பாரதிதாசன் அவர்கள் தனது 73 ஆவது வயதில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி 1964ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார்.

விருதுகள் :

பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார் புரட்சி கவிஞர் என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர்.

1946 ஆம் ஆண்டு அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.

1970 ஆம் ஆண்டு அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.

காலவரிசை :

1891 ஆம் ஆண்டு புதுவையில், ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி, 1891-ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு, மகனாகப் பிறந்தார்.

1919 ஆம் ஆண்டு காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.

1920 ஆம் ஆண்டு பழநி அம்மையார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

1954 ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1960 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி, 1964-ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

1969 ஆம் ஆண்டு அவரது மரணத்திற்குப் பின் ஐந்து ஆண்டுகள் கழித்து அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு இவருடைய படைப்புகள் தமிழ் நாடு அரசினால் உடைமையாக்கப்பட்டன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.