Tamil Quotes

நடிகர் யாஷ் வாழ்க்கை வரலாறு – Actor Yash History in Tamil

ஈடிவி கன்னடத்தில் ஒளிபரப்பான அசோக் காஷ்யப் இயக்கிய நந்த கோகுல என்ற தொலைகாட்சி தொடர் மூலம் யாஷ் தனது நடிப்பைத் தொடங்கினார். பின் பல தொடர்களில் நடிக்கதொடங்கினார்.

ஆனால் 2022 ஆம் ஆண்டு வெளியான KGF அத்தியாயம் 2 100 கோடிக்கும் அதிகமான செலவில் எடுக்கப்பட்டு ₹1200 கோடிக்கு மேல் வசூலித்து இந்தியா அளவில் சாதனை புரிந்தது.

இப்போது யாஷ் பான் இந்தியா ஸ்டார் ஆக உருவாகி உள்ளார் சின்ன திரையில் கால் பதித்து இப்போது இந்தியா சினிமாவை ஆண்டு கொண்டு உள்ளார் இவர்.

பிறப்பு :

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பூவனஹள்ளி என்ற கிராமத்தில் வொக்கலிகா குடும்பத்தில் 8 ஜனவரி 1986 ஆம் ஆண்டு யாஷ் பிறந்தார்.

அவரது தந்தை அருண் குமார் ஜே. கே.எஸ்.ஆர்.டி.சி போக்குவரத்து சேவையில் பணிபுரிந்தார், பின்னர் பிஎம்டிசி போக்குவரத்து சேவையில் டிரைவராக பணிபுரிந்தார்.

அவரது தாயார் புஷ்பா ஒரு இல்லத்தரசி. அவருக்கு நந்தினி என்ற தங்கை உண்டு.

அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு

இளமை பருவம் :

அவரது குழந்தைப் பருவம் மைசூரில் மழிச்சியாக இருந்தது, அங்கு அவர் மகாஜன கல்விச் சங்கத்தில் தனது பல்கலைக்கழகப் படிப்பை படித்தார் படிப்பிற்குப் பிறகு, நாடகக் கலைஞர் பி.வி.காரந்த் உருவாக்கிய பெனகா நாடகக் குழுவில் சேர்ந்தார்.

ஆரம்பகால சினிமா துறை மற்றும் சின்ன திறை :

ஈடிவி கன்னடத்தில் ஒளிபரப்பான அசோக் காஷ்யப் இயக்கிய நந்த கோகுல என்ற தொலைகாட்சி தொடர் மூலம் யாஷ் தனது நடிப்பைத் தொடங்கினார். பின் பல தொடர்களில் நடிக்க தொடங்கினார்.

அவர் 2008 இல் ஷஷாங்க் இயக்கிய மனசு படத்தில் துணை வேடத்தில் நடித்தார். இவர் தொலைக்காட்சி நாடகத்தில் பல்வேறு பாத்திரங்களை நடித்துள்ளார்.


2007 ஆம் ஆண்டு ஜம்பாடா ஹுடுஜி எனும் படத்தின் வாயிலால் திரையுலகத்திற்கு அறிமுகமானார், மேலும் இப்படத்தில் ஒரு துணை பாத்திரத்தில் நடித்தார்.

அவரது இரண்டாவது படமான மொகிஜினா மனசு, ராதிகா பண்டிட் படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடைந்தது.

யஷ் கிராம நகைச்சுவை படத்தில் அவரது நடிப்பிற்காக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார். பின்னர் முன்னணி கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்தார்.

2016 ஆம் ஆண்டில், அவர் சாந்து ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டில் நடித்தார்,
இது பாக்ஸ் ஆபிஸில் ₹30 கோடி வசூல் செய்து நன்றாகவே சாதனை செய்தார்.

KGF பான்-இந்தியா :

2018 ஆம் ஆண்டு அவர் KGF அத்தியாயம் 1 என்ற படத்தில் நடித்தார், இது கன்னடத்தில் வெளியிடப்பட்டது, இது ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட பதிப்புகளுடன் வெளியிடப்பட்டது.

இந்த படம் 80 கோடி செலவில் எடுக்கப்பட்டு ₹250 கோடிக்கு மேல் வசூலித்து கன்னடத் துறையில் அதிக வசூல் செய்த படமாக சாதனை புரிந்தது. இந்த படம் இவருக்கு இந்திய அங்கீகாரத்தை அளித்தது, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் இவருக்கு ரசிகர்களையும் உருவாக்கியது.


பின் 2022 ஆம் ஆண்டு வெளியான KGF அத்தியாயம் 2 100 கோடிக்கும் அதிகமான செலவில் எடுக்கப்பட்டு ₹1200 கோடிக்கு மேல் வசூலித்து இந்தியா அளவில் சாதனை புரிந்தது.


இப்போது யாஷ் பான் இந்தியா ஸ்டார் ஆக உருவாகி உள்ளார் சின்ன திரையில் கால் பதித்து இப்போது இந்தியா சினிமாவை ஆண்டு கொண்டு உள்ளார் இவர்.

தனிப்பட்ட வாழ்க்கை :

நடிகை ராதிகா பண்டிட்டுடன் யாஷ் நீண்ட காலமாக காதலில் இருந்ததாகவும் பின் அவர்களது நிச்சயதார்த்தம் 12 ஆகஸ்ட் 2016 ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்றது.

பின் 9 டிசம்பர் 2016 அன்று பெங்களூரில் ஒரு தனியார் விழாவில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

அறகட்டளை :

2017 ஆம் ஆண்டு, யாஷ், அவரது மனைவி ராதிகா பண்டிட் உடன் இணைந்து யஷோ மார்கா அமைப்பை நிறுவி, சமூகத்தின் முன்னேற்றத்திற்கான செயலை செய்து வருகிறார்கள்.


இதன் மூலம் ஏரிகளை சுத்தப்படுத்துவதற்கும், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கும் ₹ 4 கோடி முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

விருது :

இவர் பெங்களூர் டைம்ஸ் மிகவும் விரும்பத்தக்க மனிதர் பட்டியலில் பல்வேறு முறை தோன்றியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு GQ இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க இளம் இந்தியர்களின் பட்டியல்களிலும் அவர் இடம் பெற்றார்.

2018 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.

Exit mobile version