Tamil Quotes

Aamir Khan History in Tamil – அமீர் கான் வாழ்க்கை வரலாறு

பாலிவுட்டில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல துறையில் வலம் வரும் நடிகர் அமீர்கான் யாதோன் கி பாரத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தொடங் இன்று பாலிவுட் திரையுலகில் பெரிய நடிகராக உள்ளார்.

திரைப்படம் நடிப்பது மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், எழுத்தாளராகவும் இருக்கிறார். இந்திய அரசின் மிக உயரிய விருதுகளான ‘பத்மஸ்ரீ’ மற்றும் ‘பத்மபூஷன்’ விருதுகளை வாங்கியுள்ளார். 3 தேசிய விருதுக்கும் உரிமையாளர் இவர்.

தனக்கென உலகளவில் ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தி சாதித்த ஆமிர் கான் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

மார்ச் மாதம், 14 ஆம் தேதி 1965 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையிலுள்ள பாந்த்ராவில் , தாஹிர் ஹுசைன் மற்றும் ஜீனத் ஹுசைன் தம்பதியருக்கு மகனாக ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தையான தாஹிர் ஹூசைன் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர்.

எல். கே. அத்வானி் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும் :

அவரது குடும்பம் பல தலைமுறைகளாக இந்தியத் திரைப்படத் துறையில் இருக்கிறது. அவரது தந்தை தாஹிர் ஹூசைன் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், அவரது மாமா தயாரிப்பாளராகவும், அத்துடன் அவர் ஒரு இயக்குநராகவும், நடிகராகவும் இருந்தவர்.

ஆகவே, அவருக்கு 8 வயதிருக்கும் போது, நசீர் ஹூசைன் அவரது படமான
‘யாதோன் கி பாராத்’ என்ற திரைப்படத்தில் ஆமிரை ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகு, தனது பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்திய ஆமிர் கான் விளையாட்டிலும் சிறந்து விளங்கி மகாராஷ்டிராவின் மாநில டென்னிஸ் சாம்பியனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திரையுலக வாழ்க்கை :

கான் அவரது திரைப்பட வாழ்க்கையை அவரது குடும்பத் தயாரிப்பான நசீர் ஹூசைனால் உருவாக்கப்பட்ட யாடோன் கி பாரத் (1973) மற்றும் மத்தோஷ் (1974) ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தொடங்கினார். 16 ஆண்டுகள் கழித்து, மேத்தாவின் ஹோலி (1984) திரைப்படத்தில் அதிகம் கவனிக்கப்படாத பாத்திரத்தின் மூலம் தொடங்கியது.

கயாமத் சே கயாமத் தக்’ என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படம் வர்த்தக ரீதியாக அமோக வெற்றியடைந்து, அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது.

கான் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வருகிறார். 1996 ஆண்டு வெளிவந்த ராஜா இந்துஸ்

ஏழு விருதுப் பரிந்துரைகளுக்குப் பிறகு அவரது முதல் சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது, மேலும் அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

அத்துடன் 1990களில் அதிகமாக வசூலித்த படங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 2001 இல் அவர் லகான் திரைப்படத்தில் தோன்றினார்.

அந்த திரைப்படம் பெரியளவில் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது, மேலும் 71 ஆவது அகாடெமி விருதுகளில் சிறந்த அந்நிய மொழித் திரைப்படத்துக்கான பரிந்துரையைப் பெற்றது.பிறகு பல வெற்றி படங்கள் நடித்து உள்ளார்.

தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக ஆமிர் கான் :

2001 இல் அமீர்கான் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை கான் நிறுவினார். அவரது முதல் தயாரிப்பு லகான் திரைப்படமாகும். அந்த திரைப்படம் 2001 இல் வெளிவந்தது, அதில் நடித்ததன் மூலம் கான் முன்னணி நடிகரானார். அந்தப் படம், பல்வேறு விருதுகளைப் பெற்று, நமது நாட்டிற்கும், ஹிந்தித் திரையுலகிற்கும் பெருமைத் தேடித்தந்தது.


சில ஆண்டுகள் கழித்து, 2007ல் ‘தாரே ஜமீன் பர்’ என்ற படத்தை மீண்டும் அவரது தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. இப்படமும் பல விருதுகளைக் குவித்தது. 2008 இல், கான் அவரது தயாரிப்பில் வெளிவந்த ஜானே டு யா ஜானே நா திரைப்படத்தில் அவரது உறவினர் இம்ரான் கானை அறிமுகப்படுத்தினார்.

அந்தப் படம் இந்தியாவில் பெரும் வெற்றியடைந்தது, முடிவாக
அத்திரைப்படம் கானுக்கு சிறந்த திரைப்படத்திற்கான ஃபிலிம்பேர் விருதுப் பரிந்துரையைப் பெற்றுத் தந்தது. பின்னர், 2011ல் ‘தோபி கட்’ என்ற படம் மற்றும் 2012ல் ‘தலாஷ்’ என்ற படத்தை அந்நிறுவனம் தயாரித்து, அதில் அவர் ஹீரோவாகவும் நடித்திருந்தார். அவ்விரு படங்களும், மாபெரும் வெற்றியைத் தழுவியது.

இல்லற வாழ்க்கை :

ஆமிர் கான் ரீனா தத்தா என்ற பெண்ணை காதல் செய்து ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி, 1986 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். அமீர் தனது முதல்மனைவியான ரீனா தத்தாவை 2002-ல் விவாகரத்து செய்தார்.

அமீர்கான் பின் கிரண் ராவை 2005-ல் திருமணம் செய்துக்கொண்டனர். அவர்கள் இருவருக்கும் ஆசாத் ராவ் கான் என்ற மகன் இருக்கிறார் .பின் 2021-ல் கிரண் ராவை விவாகரத்து செய்தார்.

விருதுகள் :

‘பத்மஸ்ரீ’ விருதை 2003 ஆம் ஆண்டு மற்றும் , ‘பத்மபூஷனை’ 2010 ஆம் ஆண்டும் பெற்றார்.

3 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

7 முறை ஃபிலிம்ஃபேர் விருது

ஐந்து ஸ்க்ரீன் விருதுகளையும், மூன்று முறை ஐஐஎஃப்எ விருதுகளையும், கோலாபுடி ஸ்ரீனிவாச விருதையும், இரண்டு முறை பெங்கால் ஃபிலிம் ஜர்னலிஸ்ட்’ஸ் அஸ்ஸோசியஷன் விருதுகளையும், மூன்று முறை ஜீ சினி விருதுகளையும், இரண்டு முறை பாலிவுட் மூவி விருதுகளையும், ஸ்டார்டஸ்ட் விருதுகளையும், சர்வதேச இந்திய பட விருதுகளையும், மற்றும் பல விருதுகளையும் வென்றுள்ளார்.

Exit mobile version