Tamil Quotes

200 crore Success Story Harini Sivakumar – 200 கோடி வெற்றி பயணம் ஹரிணி சிவகுமார்

சென்னையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஹரிணி சிவகுமார் தன்னுடைய சொந்த முயற்ச்சியால் பல தடைகளை தாண்டி 200 கோடி மதிப்பிலான நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரின் வெற்றி பயணத்தை பற்றி பார்க்கலாம்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

ஹரிணி சிவகுமார் பிறந்தது தமிழ்நாட்டில் இருக்கும் சென்னையில். இவர் தொடக்ககல்வியில் இருந்து கல்லூரி வரை சென்னையில் படித்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் எல்லோரும் நினைப்பது போல படித்து முடித்துவிட்டு நல்ல வேலைக்கு போக ஆசைப்பட்டார்.

Peppa Foodie – Success Story

திருமணம் :

ஆனால் இவருக்கு 22 வயது இருக்கும் போதே இவர் பெற்றோர் ஹரிணிக்கு திருமணம் செய்து விட்டனர். ஒரு வங்கியில் வேலைக்கு சென்று கொண்டு இருந்த இவர். தனது 23 வயதில் குழந்தை பிறந்ததால் வேலையை கைவிட்டார். எதிர்பார்க்காத விதமாக இவர் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம்(down syndrome) என்ற நோய் இருப்பது தெரியவந்தது.

அந்த வயதில் ஹரிணிக்கு இந்த நோய் பற்றி தெரிந்து கொள்ள ஒரு வருடம் ஆகி உள்ளது. பின் 5 வருடம் குழந்தையை பார்த்து கொள்ள ஒரு இடைவெளி எடுத்தார். நிறைய பெண்கள் பெரும்பாலும் இது போன்ற இடைவெளிக்கு பிறகு வேலைக்கு செல்ல மாட்டார்கள். ஆனால் இவர் இந்த இடைவெளியை பயன் படுத்தி Earth Rhythm என்ற நிறுவனத்தை உருவாக்கி உள்ளார்.

முதல் முயற்ச்சி :

இவர் குழந்தைக்கு axima என்ற தோல் நோய் இருந்ததால். வீட்டில் சில தோல் நோய் மருந்து செய்ய தொடங்கினார். நாட்கள் செல்ல செல்ல இவர் தயாரிக்கும் பொருட்களை விற்க ஆசைப்பட்டார். இதனால் இன்ஸ்ட்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளத்தில் எப்படி விற்க வேண்டும் என்று கற்றுக்கொள்ள தயார் ஆனார்.

அதே சமயம் இவரை சுற்றி இருக்கும் பலருக்கும் இந்த தயாரிப்பை அறிமுகப்படுத்தி விற்க தொடங்கினார். பின் 2016-ல் இவர் குழந்தை பள்ளி செல்ல தொடங்கியதும். இவர் இந்த தயாரிப்பை இன்னும் மேம்படுத்த கல்லூரிக்கும் சென்று வேதியியல் படிப்பில் பட்டம் பெற்றார்.


இதனால் வாடிக்கையாளருக்கு எப்படி வேண்டுமோ அதே போல இவருடைய தயாரிப்பை மாற்ற தொடங்கினார். இதை பார்த்த பலரும் இவரிடம் தங்களுடைய பிரச்சனைகளை சொல்லி அதற்க்கு ஏற்றது போல தயாரிப்பை பெற்று கொண்டனர். இந்த செயலால் பல வாடிக்கையாளர்கள் இவருக்கு மிகவும் நெருக்கம் ஆகிவிட்டனர்.

அப்பா வருகை :

பின் 2017 ஆம் ஆண்டு இவர் வீட்டை தேடி பல வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக வர தொடங்கினர். அந்த சமயம் ஹரிணி வீட்டிற்க்கு அவர் தந்தை இவரை பார்க்க வந்த போது. இவர் செயலை கண்டு அதிர்ச்சி ஆனார். பின் அவருக்கு இவர் பொருட்களை விவரித்து ஹரிணி சொல்ல தொடங்கினார்.

இவர் வாடிக்கையாளர்கள் பணம் குடுத்து விட்டு தயாரிப்பை பெறுவதற்க்கு காத்து இருப்பதாகவும். ஆனால் இங்கே என்னால் செய்ய முடியவில்லை என்று கூறினார்.

Earth Rhythm என்ற நிறுவனம் :

பின் 2019 ஆம் ஆண்டு இவர் தந்தையுடன் இணைந்து Earth Rhythm என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இவர் வாடிக்கையாளர்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் முக்கிய கவனம் கொண்டு இந்த நிறுவனத்தை தொடங்கினார்.

பெண்களை பணிக்கு நேர்காணல் :

இவர் தொடங்கிய நிறுவனத்தில் வேலைக்கு ஆள் சேர்க்க. இவர் குடி இருந்த அடுக்குமாடி கட்டடத்தின் காவலாளியிடம் யாராவது வீட்டு வேலைக்கு ஆள் இருந்தால் சொல்லுங்க என்று கேட்டு உள்ளார். அடுத்த நாள் நிறைய பெண்கள் அவர் வீட்டு முன் வந்து நின்று உள்ளனர்.

அதில் ஒரு பெண் கல்லூரி படிப்பை முடித்து விட்டு இந்த வேலைக்கு வந்து இருப்பதை அறிந்த கொண்ட ஹரிணி. அவள் இடம் ஏன் இந்த வீட்டு வேலைக்கு நீ வருகிறாய் என்று கேட்டு உள்ளார். அதற்க்கு அந்த பெண் எனக்கு ஆங்கிலம் தெரியாது ஆகையால் என்னால் பெரிய நிறுவனத்தில் சேர முடியாது என்று கூறியுள்ளார்.

ஹரிணிக்கு அந்த பெண்ணை பிடுத்துவிட்டது. 5000 ரூபாயில் தன் பணியை தொடங்கி இன்று 50000 ரூபாய் பெற்று வருகிறார் அந்த பெண் . இவர் திறமையால் இவருக்கு கீழ் 20 பெண்கள் இன்று வேளை செய்து வருகிறார்கள். பின் இவர் நிறுவனத்தில் பல பெண்களை பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்து.

தன் நிறுவனத்தை விரிவு படுத்தி வருகிறார். இன்று இவர் நிறுவனத்தில் 100 பெண்களுக்கும் மேல் பணி புரிகிறார்கள் .

200 கோடி மதிப்பு :

இந்த நிறுவனம் சமூக வலைதளத்தில் மட்டும் தங்கள் தயாரிப்பை விற்று வருகிறது. இன்னும் நேர்முகமாக விற்கவில்லை. ஆனால் ஹரிணி Earth Rhythm நிறுவனம் சுமார் 200 கோடி மதிப்பில் இன்று வளர்ந்து கொண்டு இருக்கிறது.

ஹரிணி படித்தது வேறு செய்யும் தொழில் வேறு. இவர் படிப்புக்கு முக்கியதுவம் தரவில்லை. தன்னுடைய ஆசைக்கு முக்கிய துவம் குடுத்து தன்னை செதுக்கி வளர்த்து வருகிறார்.

சென்னையில் பிறந்து புது டெல்லியில் நிறுவனத்தை தொடங்கி பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் ஹரிணி இன்னும் பல சாதனைகளை செய்து பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்.

Exit mobile version