Tamilisai Soundararajan History in Tamil – தமிழிசை சௌந்தரராஜன் வாழ்க்கை வரலாறு

Tamilisai Soundararajan

பிறப்பு :

1961-ஆம் ஆண்டு, ஜூன் 2-ஆம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குமரி அனந்தன் – கிருஷ்ணகுமாரி தம்பதியர்களுக்கு மகளாகப் பிறந்தார். இவருடைய தந்தை முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். தமிழிசையுடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர். Tamilisai Soundararajan History in Tamil.

கல்வி :

தமிழிசை மதராசு மருத்துவக் கல்லூரியில்(MMC) தனது மருத்துவ படிப்பை முடித்தார். மகப்பேறியல் மற்றும் பெண் உயிரியல் கல்வியை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திலும் சோனாலஜி , F.E.T சிகிச்சைக்கான பயிற்சியினை கனடாவிலும் படித்தார்.

ராமச்சந்திரா பல்கலை கழகத்தில் ஐந்து ஆண்டுகள் உதவி பேராசிரியராகவும், பின் ராஜ் தொலைக்காட்சியில் பத்து ஆண்டுகள் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடத்தி வந்த தமிழிசை. அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் மகளிர் பஞ்சாயத்து என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.

சிறு வயதிலிருந்தே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த இவர் கல்லூரி படிக்கும்போதே மாணவர்கள் தலைவராக இருந்தார்.

ஜான்சி ராணி வாழ்க்கை வரலாறு – Jhansi Rani History Tamil

அரசியலில் ஈடுபாடு :

மருத்துவத்தில் ஈடுபட்டிருந்த தமிழிசைக்கு பேச்சும், அரசியலும் இரு கண்களாக இருந்தது. தந்தை குமரி அனந்தனையும், காங்கிரஸ் கட்சியும் பின்பற்றிய தமிழச்சிக்கு காங்கிரஸில் சேர்ந்து நேரடி அரசியல் செய்ய விருப்பம்.

ஆனால் வாரிசு அரசியலை காரணம் காட்டிய அவர் தந்தை, நான் இருக்கும் வரை என் வாரிசுகள் யாரும் காங்கிரஸில் சேர்ந்து நேரடியாக அரசியல் செய்வதில் எனக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்து விட்டார்.

இச்சமயத்தில் 1996-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது, தேர்தல் வேலைகளில் ஈடுபட்டிருந்தார் தமிழிசை.

அத்தேர்தலில் தமிழிசையின் தந்தையை எதிர்த்து பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். அப்போது பாஜக தொண்டர்கள் செய்த தேர்தல் வேலைகள் தமிழிசைக்கு மிகவும் போய்விட்டது. இதுவே பாஜக மீது தமிழிசைக்கு ஏற்பட்ட முதல் ஈர்ப்பு.

பாஜகவில் தமிழிசை :

காங்கிரஸில் தானே அரசியல் செய்யக்கூடாது பாஜகவில் இணைந்து கொள்ளலாமே என நினைத்தார் தமிழிசை. காரணம் அப்போது தான் பாஜக இந்திய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக வளர்ந்து கொண்டிருந்தது.

ஆனால் தமிழிசை பாஜகவில் இணைவதில் குமரி அனந்தனுக்கு துளியும் விருப்பமில்லை. பாஜகவின் மீது ஈர்ப்பு இருந்தாலும் RSS பற்றிய எதிர்மறையான கருத்துகளும் இருந்தது.

அச்சமயத்தில் தஞ்சாவூர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார் தமிழிசை. அப்போது ஆபத்தான நிலையில் இருந்த ஒரு நோயாளிக்கு ரத்தம் தேவைப்பட்டது. அதற்கு RSS தொண்டர்கள், தன்னார்வலர்களிடம் உதவி கேட்டு ரத்தம் பெறப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிறகு RSS தொண்டர்கள் மீதான எதிர்மறை கருத்துக்கள் மாறின. அதன் பிறகு குமரி அனந்தனுக்கு தெரியாமல் பாஜகவில் இணைந்து கொண்டார் தமிழிசை. இதனால் ஏற்பட்ட அதிருப்தியால் மகளிடம் ஏழு மாதங்கள் வரை குமரிஅனந்தன் பேசவே இல்லை.

அரசியல் களத்தில் தமிழிசை :

1998-ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்தது பாஜக. ஆனால் அது நீடிக்கவில்லை 13 மாதங்களில் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு அதிலும் பாஜக வெற்றி பெற்றது.

அச்சமயத்தில் தான் பாஜகவில் முறைப்படி தமிழிசை இணைந்தார். அடிமட்ட தொண்டராக ஆரம்பித்து கட்சியின் அதிகாரப்பூர்வ பேச்சாளராக மெல்ல மெல்ல வளர்ந்தார் தமிழிசை.

இருப்பினும் தமிழிசை காங்கிரஸ் தலைவரின் மகள் என்பதால் அவரை காங்கிரஸ் பார்வையுடன் ஆரம்ப கட்டத்தில் அணுகினார்கள். அப்போது தமிழிசைக்கு ஆதரவளித்து உறுதுணையாக நின்றவர் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இல கணேசன்.

தமிழிசை கட்சிப் பணியில் காட்டிய ஆர்வமும் அவருடைய பேச்சும் அவரை அடுத்த அடுத்த கட்டத்திற்கு முன்னேற செய்தது.

சமூக ஊடகங்களின் பாஜக பிரதிநிதியாக காட்சியளித்த தமிழிசை தேர்தல் சமயங்களில் பாஜகவின் பிரச்சார பீரங்கிகள் ஒருவராக செயல்பட்டார். இதன் பலனாக பாஜகவின் மாவட்ட மருத்துவ அணி, மாநில மருத்துவ அணி, மருத்துவ அணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் என முன்னேறிக் கொண்டிருந்த தமிழிசை தமிழக பாஜகவின் மாநில பொதுச் செயலாளராகவும், மாநிலத் துணைத் தலைவராகவும், அகில இந்திய செயலாளராகவும் மென்மேலும் வளர்ந்து கொண்டிருந்தார். Tamilisai Soundararajan History in Tamil.

தமிழக பாஜக தலைவர் :

தமிழிசையின் அரசியல் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனையாக அமைந்தது 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தல். அத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடி பிரதமரானார்.

அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்தவர் பொன்ராதாகிருஷ்ணன். கன்னியாகுமரி மாவட்டத்தில் நின்று வெற்றி பெற்ற அவரை அமைச்சராக டெல்லி தலைமை நியமித்தது.

பாஜகவின் கொள்கையின்படி அமைச்சராக இருப்பவர் தலைவராக இருக்கக் கூடாது என்பதால் பொன்ராதாகிருஷ்ணன் அப்பதவியிலிருந்து விலகினார்.

அதன் பிறகு டெல்லி தலைமை பாஜக தமிழக தலைவராக தமிழிசை தேர்வு செய்தது. பல மூத்த தலைவர்கள் இருக்கையில் தமிழிசை தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டது பல சர்ச்சைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியது.

இருப்பினும் தமிழகத்தின் முதல் பெண் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார் தமிழிசை சௌந்தரராஜன்.

அது மட்டுமின்றி 2017-ம் ஆண்டு மத்திய அரசின் பெட்ரோலிய நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குனராக நியமிக்கப்பட்டார் தமிழிசை.

சேகுவேரா வாழ்க்கை வரலாறு – Che Guevara History in Tamil

சந்தித்த தேர்தல்கள் :

2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராமாபுரத்தில் போட்டியிட்டு சுமார் 5 ஆயிரம் வாக்குகளைப் பெற்று ஐந்தாம் இடத்தை பிடித்தார்.

2009 மக்களவைத் தேர்தலில் வட சென்னையில், ல.பாண்டியன் P.K.S இளங்கோவனை எதிர்த்து போட்டியிட்டு 23ஆயிரம் வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றார்.

2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வேளச்சேரியில் போட்டியிட்டு 7 ஆயிரம் வாக்குகள் பெற்று நான்காம் இடத்தை பிடித்தார்.

அவர் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு 2006-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர் கொண்டார். ஆனால் அத்தேர்தலிலும் தோல்வியை தழுவினார்.

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். இருப்பினும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார்.

மேதகு ஆளுநர் :

தேசிய அரசியலிலும் மாநில அரசியலிலும் பல விமர்சனங்களையும், கேளிக்கைகளிலும், சவால்களையும், சர்ச்சைகளையும் தாண்டி பல ஆண் தலைவர்கள் மத்தியில் மென்மேலும் வளர்ந்து வந்த தமிழிசை தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

Leave a Comment